விமானம் வழியாகவோ, கப்பல் வழியாகவோ வெளி நாடுகளுக்குப் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்
என்று அரசு கடந்த வியாழக் கிழமை, செப்டம்பர் 2ஆம் தேதி அறிவித்தது.
இந்த நடைமுறை கடந்த வருடம் (2020) மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்தது. இந்த மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி முடிவடையவிருந்த தடை, மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வரை தொடரும்.
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
- சர்வதேச பயணத் தடை டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வரை நீடிக்கும்
- பயண விலக்கு இல்லாமல், குடியுரிமை உள்ள ஒருவரோ நிரந்தர வதிவிட வீசா வைத்திருப்பவரோ நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
- மாநில எல்லைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் திறப்பதை அரசு மிகவும் விரும்புகிறது
வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுவதற்கு, Governor-General David Hurley அனுமதி வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் Greg Hunt கடந்த வியாழக்கிழமை கூறினார்.

இந்த முடிவை அறிவித்த அமைச்சர் Greg Hunt, பொது சுகாதாரத்திற்கு ஏற்க முடியாத ஆபத்தை ஏற்படுத்தி வரும் Covid-19 தொற்றைக் கட்டுப்படுத்த இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Covid-19 பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர், சர்வதேச பயணத்தை அனுமதிக்கப் போவதாக, கடந்த ஜூலை மாதம் பிரதமர் Scott Morrison அறிவித்திருந்தார்.

ஆனால், அது எப்போது நடக்கும் என்ற கால வரையறை எதையும் அவர் குறிப்பிட வில்லை. இருந்தாலும், தடுப்பூசி இலக்குகளை அடையும் வரை எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் என்பது மீண்டும் தெளிவாகத் தெரிகிறது/
ஆனால் சிங்கப்பூர் மற்றும் சில பசிஃபிக் நாடுகளுடன் தடையில்லாப் பயணத்தை அரசு அனுமதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பன் மற்றும் தலைநகர் கன்பரா ஆகிய இடங்களில் தற்போது கொரோனா வைரஸ் டெல்டா வகை வேகமாகப் பரவி வரும் காரணத்தால் பல்வேறு முடக்கநிலை கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
மாநில எல்லைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டும்
என்று கருவூலக்காப்பாளர் Josh Frydenberg கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
