SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்கள் மீதான வெளிநாட்டு பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி!

ஆஸ்திரேலியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடைக்கு சாதகமாக பெடரல் நீதிமன்றின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

COVID-19 isolation rules force airlines to cancel Christmas Eve flights
COVID-19 isolation rules force airlines to cancel Christmas Eve flights Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • ஆஸ்திரேலியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • Lobby group LibertyWorks இதுகுறித்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது.
  • அரசுக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களையும் LibertyWorks செலுத்த வேண்டுமென தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து ஆஸ்திரேலியர்கள் எவரும் வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெடரல் நீதிமன்றால் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் நியூசிலாந்து தவிர(ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாடு நடைமுறையில் உள்ளது) வேறு நாடுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் பயணம்செய்ய வேண்டுமெனில் உள்துறை அமைச்சிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.

இந்நடைமுறை கடந்த ஆண்டு மார்ச் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்தப்பின்னணியில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இக்கட்டுப்பாடானது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் இக்கட்டுப்பாடு செல்லுபடியற்ற ஒன்று எனவும் தெரிவித்து Lobby group LibertyWorks  நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் குறித்த அமைப்பின் பணியாளர் ஒருவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பெடரல் நீதிமன்றம் இதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதுடன் இவ்வழக்கு காரணமாக ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்பட்ட செலவினை LibertyWorks செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now