மெல்பனில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருகிறது.
நேற்றையதினம் Carlton-இலுள்ள Park ஹோட்டலில் பல இடங்களில் தீ ஏற்பட்டதாகவும், இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின் பல இடங்களில் எப்படி தீப்பற்றியது என ஆராயப்பட்டுவருவதாக விக்டோரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டலில் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து மருத்துவ தேவைக்காக அழைத்துவரப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
