SKIP TO MAIN CONTENT

வானியலில் இவ்வளவு பிரமாண்டமா? நாசா வெளியிட்டிருக்கும் படங்களின் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா (NASA), ஐரோப்பிய மற்றும் கனேடிய விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக James Webb என்ற தொலைநோக்கியை 2021 டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பியது. அது தொடர்பான தகவல்களை நேயர்களுடன் நாம் கட்டுரையாகவும், ஒலிவடிவிலும் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்.

 A handout photo made available by the NASA shows the edge of a nearby, young, star-forming region called NGC 3324 in the Carina Nebula, captured in infrared light by NASA’s new James Webb Space Telescope and released on 12 July 2022. This image reveals f
A handout photo made available by the NASA shows the edge of a nearby, young, star-forming region called NGC 3324 in the Carina Nebula, captured in infrared li Source: AAP Image/EPA/NASA, ESA, CSA, and STScI HANDOUT

3 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது.

இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்போது, சுமார் 7 மாதங்களுக்குப் பின் 'ஜேம்ஸ் வெப்' James Webb தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் அல்லது காட்சிகள் விஞ்ஞான உலகை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளன.

US President Joe Biden during a briefing from National Aeronautics and Space Administration officials about the first images from the Webb Space Telescope.
US President Joe Biden during a briefing from National Aeronautics and Space Administration officials about the first images from the Webb Space Telescope. Source: EPA

அமெரிக்காவில் Maryland இலுள்ள Goddard Space Flight Center இல் அமெரிக்க அதிபர் Joe Biden ஆல் கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள  இந்தப் படங்கள், 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அனுப்பப்பட்ட இந்த தொலைநோக்கியின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளன.

பிரபஞ்சத்தில்  மிகத்தொலைவில் அமைந்துள்ள பகுதிகளைத் துல்லியமாகக்  காண இந்த தொலைநோக்கியிலுள்ள infrared cameras என்ற அகச்சிவப்பு கமராக்கள் துணைபுரிகின்றன.

‘James Webb பூமிக்கு அனுப்பிவைத்துள்ள படங்கள், நாம் முன்னர் எப்போதும் பார்த்திராத கோணத்திலிருந்து பிரபஞ்சத்தை ( universe) பார்ப்பதற்கு நமக்கு உதவியிருக்கின்றன’  என்று NASA வின் நிர்வாகி Bil Nelson கூறியிருக்கிறார்.

NASA, ESA, CSA, STScI
Source: NASA, ESA, CSA, STScI

‘இந்தப்படங்கள் மிக அழகானவை; விஞ்ஞான ரீதியில்  எமக்குப் புதிய தகவல்களை அவை தந்துள்ளதோடு, நாம் இதுவரை இனங்கண்டு கொள்ள முடியாமற்போன பல நிகழ்வுகளையும் விடயங்களையும் இவை எமக்குத் விளக்கியிருக்கின்றன’ என்று James Webb senior project scientist மற்றும் நோபல் பரிசு பெற்ற cosmologist John Mather, AFP செய்தி சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.

பூமியில் இருந்து 8500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா Carina Nebula பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் Spectrum பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா Southern ring Nebula பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குயின்டே Stephan’s Quintet எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது கிடைத்திருக்கும் பிரபஞ்சத்தின் புகைப்படங்களை இதுவரை பிரபஞ்ச ஆய்வுகளில் கிடைக்கப்பெறாதவையாகும்.

NASA, ESA, CSA, STScI
Source: NASA, ESA, CSA, STScI

பிரபஞ்சத்தின் தொலைவு ஒளி ஆண்டுகளால் கணிக்கப்படுகிறது. ஒரு ஒளி ஆண்டு என்பது 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர்களாகும். 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் galaxies- விண்மீன்திரள் எப்படி இருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டும் படங்களை James Webb அனுப்பியிருப்பதாக விஞ்ஞானிகள் புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், கரீனா நிபுலா என்ற பிரபஞ்சத்தில் மலை முகடு போன்ற பகுதியில் நட்சத்திரங்கள் ஒளிரும் நிகழ்வை 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

Carina Nebula -கரீனா நிபுலாவின் NGC 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் சிறிய முதல் பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்வதை தொலைநோக்கி புகைப்படமாக எடுத்துள்ளது. கரீனா நிபுலா பிரபஞ்சம், வாயு, துகள்கள் நிரம்பியதாகவும் அந்த மலை முகடு போன்ற பகுதியில் இருந்து நட்சத்திரம் உருவாகுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Southern Ring Nebula
Southern Ring Nebula Source: NASA, ESA, CSA, and STScI

WASP -96 b- என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு கோளை ஆராய்ந்த்ததில்  அந்த கோள் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகிறது என்றும் ஒரு முறை சூரியனைப் போன்ற அளவுள்ள பெரிய நட்சத்திரமொன்றைச்   சுற்றி வர மூன்றரை நாட்களாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வாயுக்களுடன் 538 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் அந்த கோள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பெரியதாகவும் உப்பிய நிலையிலும் உள்ள அந்த கோள் சுற்றி வரும்போது ஆய்வு செய்யப்பட்டது. அதில் இருந்து கிடைத்த ஒளி அலைக்கற்றைகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்பட்டது.  அந்தக் கோளில் நீர், மேகங்கள், மூடுபனி இருந்ததற்காக அறிகுறிகள் தென்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிரவும்  இதுவரை எமது கண்களுக்கோ வேறு தொலைநோக்கிகளுக்கோ புலப்படாத பல புதிய நட்சத்திரங்களை இந்தப் படங்களில் காணக்கூடியதாக இருந்ததாக NASA வின் astrophysicist Amber Straughn தெரிவித்திருக்கிறார்.

Esta imagen, proporcionada por la NASA el lunes 11 de julio de 2022, muestra el cúmulo de galaxias SMACS 0723, captadas por el telescopio espacial James Webb.
Esta imagen, proporcionada por la NASA el lunes 11 de julio de 2022, muestra el cúmulo de galaxias SMACS 0723, captadas por el telescopio espacial James Webb. Source: NASA/ESA/CSA/STScI via AP

பூமியைத் தவிர மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள கோள்கள் குறித்த ஆய்வில் இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதற்கான அடுத்தகட்ட ஆராய்ச்சியாக James Webb இலுள்ள spectrographic instruments என்ற கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்யவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

பிரபஞ்சத்தின் பல்வேறு மர்மங்களுக்கு நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் விடைதரும் என்றும் நம்பப்படுகிறது.  இந்த James Webb தொலைநோக்கி 20 வருடங்கள் விண்வெளியில் செயலாற்றத்தேவையான எரிபொருளைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே விண்வெளியில் உள்ள Hubble மற்றும் Spitzer ஆகிய தொலைநோக்கிகளுடன் இணைந்து செயலாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now