நாடாளுமன்ற கட்டடத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள முன்னாள் லிபரல் ஊழியர் Brittany Higgins விவகாரத்தை கையாண்ட முறை தொடர்பில் சர்ச்சையில் அகப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds, அடுத்த மாதம் இந்தியாவுக்கு செல்லவிருந்த அரச உயர்மட்டக்குழுவிலிருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய - இந்திய அரசுகளுக்கு இடையில் நடைபெறவிருந்த Raisina பேச்சுக்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி புதுடில்லி செல்லவிருந்த உயர்மட்டக்குழுவிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Brittany Higgins விவகாரத்தில் சர்ச்சையில் அகப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds, எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட தனது இதய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அடுத்த மாத இந்தியப்பயணத்தில், Linda Reynolds பங்கெடுக்காவிட்டாலும், வெளிவிவகார அமைச்சர் Marise Payne மற்றும் படைத்துறை பிரதானி Angus Campbell ஆகியோர் திட்டமிட்டபடி டில்லி செல்லவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
