அமெரிக்காவில் வாழும் Munir Zanial, ஒரு மலேசியர். Spirit AeroSystems என்ற நிறுவனத்தில் விண்வெளி பொறியியலாளாராகக் கடமையாற்றுபவர். மலேசியாவின் 60வது சுதந்திர தினத்தை அவரது சக மலேசிய நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தொழிற்சங்கமான Spirit Boeing Employees Association (SBEA) உரிமையிலுள்ள ஒரு மைதானத்தை வாடகைக்கு எடுத்தார். அங்கே மலேசியக் கொடியைப் பறக்க விட்டு தனது இந்திய-மலேசிய நண்பர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

Malaysian students wave Malaysia flags during the 60th Independence Day celebrations at the Independence Square in Kuala Lumpur, Malaysia. Source: AAP
அமெரிக்க தேசியக் கொடியில் IS சின்னத்தைப் பதித்து Munir Zanial பறக்க விட்டார் என்று அவரை அமெரிக்க புலனாய்வுத்துறை FBIயிடம் யாரோ புகார் செய்துவிட, அவர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.

Malaysia Welfare Department collaborated with students to make a giant flag with over 5,000 coconut shells in conjunction of Malaysia's 60th Independence Day Source: AAP
இது குறித்து, அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பான The American Civil Liberties Union (ACLU), வழக்குத் தொடுத்துள்ளது. Spirit Boeing Employees Association (SBEA) இன அடிப்படையில் மட்டுமல்ல மத அடிப்படையிலும் பாகுபாடு காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.