Highlights
- மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக மேலும் ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- நேற்றையதினமும் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
- நேற்று மாலை 6மணி முதல் மெல்பன் பெருநகரப்பகுதியில் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக தொற்றுக்கண்ட அனைவரும் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் மெல்பன் வடக்கிலுள்ள Whittlesea பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்றையதினம் 60 வயதுகளிலுள்ள ஒருவருக்கும் அவருடைய வீட்டைச் சேர்ந்த நால்வருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 60 வயதுகளிலுள்ள குறித்த நபரிடமிருந்தே நேற்றுமுன்தினம் முதலாவதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கு நோய் பரவியிருக்கக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது கோவிட் தொற்றுக்குள்ளானநிலையில் மெல்பனின் Wollert பகுதிக்கு திரும்பிய நபர் ஊடாகவே இப்பரவல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் இதுவரை தொற்றுக் கண்டவர்களுக்கும் Wollert நபர் சென்றுவந்த இடங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை எனவும் மற்றுமொரு நபர் ஊடாகவே இத்தொற்று கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மெல்பனின் வடக்கில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலையடுத்து நேற்று 25ம் திகதி மாலை 6 மணிமுதல் மெல்பன் பெருநகரப்பகுதிகள் முழுவதிலும் பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
- வீடுகளுக்கு 5 விருந்தினர்களுக்கு மேல் வருகைதர முடியாது.
- வெளிப்புற ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் 30 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
- உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
இக்கட்டுப்பாடுகள் ஆகக்குறைந்தது எதிர்வரும் ஜுன் 4 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது எனத் தெரிவித்துள்ள Acting Premier James Merlino விக்டோரியாவில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை.
இதேவேளை தொற்றுக்கண்டவர்கள் சென்றுவந்த இடங்களுக்குள் இரு regional பகுதிகளும் அடங்குகின்றபின்னணியில் பின்வரும் நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tier 1 COVID exposure sites
Bundoora-Jump! Swim Schools Bundoora-21/05/2021 8:55am - 10:15am
Clifton Hill-McDonald's Clifton Hil-22/05/2021 6pm - 7pm
Epping-Nando's Epping (Dalton Rd)-19/05/2021 8:30pm - 9:20pm
Epping-Woolworths Epping North-22/05/2021 4:45pm - 5:45pm
Epping-Coles Epping (Shop Number Q002. Pacific Epping)-20/05/2021 6:45pm - 7:35pm
Epping-Woolworths Epping (Shop Number Q003. Pacific Epping)-20/05/2021 6:25pm - 7:15pm
Maribyrnong-Smiggle, Highpoint Shopping Centre-20/05/2021 5:55pm - 6:30pm
Maribyrnong-Kidstuff, Highpoint Shopping Centre-20/05/2021 5:20pm - 5:55pm
Maribyrnong-Ishka, Highpoint Shopping Centre-20/05/2021 5:45pm - 6:20pm
Maribyrnong-Lush Cosmetics, Highpoint Shopping Centre-20/05/2021 6:05pm - 6:35pm
Maribyrnong-Toyworld, Highpoint Shopping Centre-20-05-2021 5:30pm - 6:20pm
Melbourne-Bamboo House-21/05/2021 11am - 11:50am
Axedale-Axedale Tavern-23/05/2021 11:45am - 1:30pm
Coburg-The Nicholson Coffee House-22/05/2021 12:00pm - 1:00pm
Epping-The Furniture Trader-18/05/2021 12:00pm - 12:50pm
Epping-JMD Grocers & Sweets-17/05/2021 10:30am - 1:00pm
Epping-Coles Epping-20/05/2021 6:45pm - 7:35pm
Fitzroy North-Secco and Co-22/05/2021 7:35pm - 8:55pm
Port Melbourne-Port Park Cafe-24/05/2021 12:30pm - 1:00pm
Port Melbourne-The Local, Port Melbourne-21/05/2021 1:40pm - 3:30pm
Port Melbourne-Bay 101 Cafe-24/05/2021 7:30am - 8:20am
Thornbury-Little Tienda-22/05/2021 7:45am - 8:20am
Prahran-Three Monkeys-22-05-2021 9:10pm - 11:00pm
Prahran-Three Monkeys-23/05/2021 12:30am - 2:00am
Prahran-Somewhere Bar-22-05-2021 10:30pm - 1:00am
South Yarra-Circus Bar-23-05-2021 1:30am - 4:15am
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


