ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் நிறுத்திவைக்கும் போட்டி என வர்ணிக்கப்படும், மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டியில் Ireland குதிரையான Without A Fight வெற்றி பெற்றது.
இக்குதிரை 5 மில்லியன் பெறுமதியான 2023 Caulfield கோப்பையையும் வென்று தற்போது மெல்பன் கோப்பையையும் வென்றுள்ளது.
22 ஆண்டுகளுக்கு முன்னர் Ethereal என்ற குதிரை இவ்வாறு இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த நிலையில் தற்போது Without A Fight இச்சாதனையைப் படைத்துள்ளது.
Without A Fight -இன் வெற்றியானது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இக்குதிரையை ஓட்டிச்சென்ற Mark Zahra தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மெல்பன் கோப்பையை வென்ற Gold Trip-ஐயும் ஓட்டிச் சென்றவர் Mark Zahra என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என குதிரையின் பயிற்றுவிப்பாளர்களான A & S Freedman குறிப்பிட்டார்.
இரண்டாம் இடத்தை Soulcombe பெற்றுக்கொண்ட அதேநேரம் Sheraz என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இவ்வருட மெல்பன் கோப்பைக்கான வெற்றித்தொகை சுமார் 8 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
