விக்டோரியாவில் புதிதாக நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக நால்வருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என ஆராயப்பட்டுவருவதாகவும் Acting Premier James Merlino அறிவித்தார்.

Health workers conduct COVID-19 testing at the Montague St centre in South Melbourne.

Health workers conduct COVID-19 testing at the Montague St centre in South Melbourne. Source: AAP

Highlights
  • மெல்பனில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.
  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெல்பனில் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மெல்பனின் Reservoir பகுதியிலுள்ள ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் நால்வரும் ஏற்கனவே தொற்றுக்கண்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை எனவும் கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களுக்கும் இவர்கள் சென்றிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த நால்வருக்கும் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தெரியாவிட்டாலும் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு 11.59 மணிமுதல் மெல்பனில் முடக்கநிலை நீக்கப்பட்டு கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக James Merlino அறிவித்தார்.

இதன்படி இன்று வியாழன் நள்ளிரவுமுதல் மெல்பனில் வாழ்பவர்கள்

  • வீடுகளை விட்டு வெளியே செல்ல காரணம் தேவையில்லை.
  • ஆனால் தமது வீடுகளிலிருந்து 25 கிலோமீட்டர்களுக்கு உள்ளிட்ட இடங்களுக்கு மாத்திரமே பயணம் செய்யமுடியும்.
  • வேலை, கல்வி, பராமரிப்பு பெற அல்லது வழங்க மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய காரணங்களுக்காக மக்கள் 25 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யலாம்.
  • அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு எவரும் மெல்பன் பெருநகரிலிருந்து Regional விக்டோரியாவுக்கு செல்லமுடியாது.
  • வீடுகளில் விருந்தினர்களுக்கு அனுமதியில்லை.
  • வெளியிடங்களில் 10 பேர் வரை ஒன்றுகூட முடியும்.
  • வீடு தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உணவகங்கள் மீண்டும் வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
  • பள்ளிகள் மீண்டும் நேரடி கற்றல் செயற்பாட்டிற்கு மாறலாம்.
இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

அதேபோன்று Regional விக்டோரியாவில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன. இதன்படி

  • வீடுகளுக்கு நாளொன்றுக்கு இரு விருந்தினர்களுக்கு அனுமதி உண்டு.
  • வெளிப்புற ஒன்றுகூடல்களில் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
  • விக்டோரியாவுக்குள் எங்கும் பயணம்செய்யலாம்.
மேலதிக விவரங்களுக்கு coronavirus.vic.gov.au இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
இதேவேளை புதிது புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பின்வரும் இடங்கள் நேற்றிரவு முதல் exposure sites பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளன.

ஏதேனும் ஒரு தேவைக்காக பின்வரும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Reservoir-Marco Fine Food & Groceries - Reservoir CentralShop 8, 830 Plenty Rd, Reservoir VIC 3073- 08/06/2021 12:00pm - 12:30pm-Case attended venue

Thomastown-BP Thomastown72 Keon Parade, Thomastown VIC 3074-07/06/2021 6:00pm - 6:30pm-Case attended venue

Bundoora-Coles Bundoora SquareSettlement Rd & Plenty Rd, Bundoora Square Shopping Centre, Bundoora VIC 3083- 07/06/2021 12:00pm - 1:00pm-Case attended venue

Thomastown-Bunnings Thomastown11 Dalton Rd, Thomastown VIC 3074- 08/06/2021 6:00pm - 6:30pm-Case attended venue

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand