SKIP TO MAIN CONTENT

மெல்பனில் 3 பிள்ளைகளின் தாயாரான இலங்கைப் பெண் குத்திக்கொலை!

தனது கணவரிடமிருந்து பிரிந்து மூன்று பிள்ளைகளுடனும் தனியாக வசித்துவந்த இலங்கைப் பெண்ணொருவர், சரமாரியாகக் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பில் அப் பெண்ணின் முன்னாள் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Police tape restricts access to a crime scene. (AAP Image/Joel Carrett)
Police tape restricts access to a crime scene. (AAP Image/Joel Carrett) Source: AAP

2 min read

Published

Source: SBS


Skip to article content

மெல்பன் நகரிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Sandhurst என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை முன்னிரவு 11.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நிலோமி பெரேரா என்ற 43 வயது பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

இந்தச் சம்பவத்தின்போது, நிலோமி பெரேராவின் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தனது தாயின் மீது தாக்குதல் நடக்கத் தொடங்கியதும், நிலோமியின் மகள், அயல் வீட்டுக்கு ஓடிச்சென்று - "தயவுசெய்து எனது அம்மாவைக் காப்பாற்றுங்கள்" - என்று கதவைத்தட்டிக் கதறுவது சிசிடிவி மூலம் பதிவாகியுள்ளது.

அயலவர்கள் ஓடிச்சென்று இரத்தவெள்ளத்தில் கிடந்த நிலோமியை வைத்தியசாலையில் சேர்த்தபோதும், அவர் இறந்துவிட்டார்.

இருபது வருடங்களாகத் திருமண வாழ்விலிருந்த நிலோமியும் - அவரது கணவரும் கடந்த வருடம் பிரிந்திருந்தார்கள் என்றும், நிலோமி அண்மையில் தனது வீட்டின் பூட்டுக்களை மாற்றியிருந்தார் என்றும் அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலீஸார் கொலைக்குற்றச்சாட்டினைப் பதிவுசெய்து மெல்பன் மஜிஸ்திரேட்டில் முன்னிலைப்படுத்தினார்கள்.

அவர் பிணைக்கு விண்ணப்பிக்கவில்லை. எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now