SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் புதிய $5 நோட்டில் மன்னர் சார்ள்ஸின் படம் இடம்பெறாது!

பாவனையிலுள்ள நாட்டின் $5 நோட்டு புதுப்பிக்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் படத்திற்குப் பதிலாகப் பூர்வீகக் குடிமக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றை மதிக்கும் விதத்தில் புதிய வடிவமைப்பு அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Australian $5 banknote featuring portrait of Queen Elizabeth II.
The Reserve Bank has decided to update the $5 note, with the portrait of Queen Elizabeth II to be replaced by a design honouring First Nations Australians.

1 min read

Published

By Maheswaran Prabaharan

Source: SBS



Skip to article content

Key Points

  • ஆஸ்திரேலியாவின் $5 நோட்டில் இருந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படம் அகற்றப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • இது பூர்வீகக் குடிமக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றை மதிக்கும் வடிவமைப்பாக மாற்றப்படும்.
  • அரசுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் $5 நோட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. அதில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் படத்துக்குப் பதிலாகப் பூர்வீகக் குடிமக்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் வடிவமைப்புகள் இடம்பெறவுள்ளன.

இந்த $5 நோட்டின் மறுபக்கத்திலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் தொடர்ந்தும் காணப்படும்.

ஆஸ்திரேலிய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அரசின் ஆதரவுடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து புதிய $5 நோட்டு வடிவமைக்கப்படும் என்று RBA தெரிவித்துள்ளது.

இதனை வடிவமைத்து அச்சிட சில ஆண்டுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய $5 நோட்டு தொடர்ந்தும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் புதிய நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் அதனைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now