சிட்னி Hombush பகுதியில், sewage-கழிவுநீரில் கொரோனா வைரஸின் தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள suburb-களில் வாழும் 40 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்வரும் 15 suburb-களில் வாழ்பவர்களில் எவருக்கேனும் இலேசான அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக தம்மை கோவிட் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Concord
- Concord West
- Homebush
- Homebush West
- Liberty Grove
- Lidcombe
- Newington
- North Strathfield
- Petersham
- Rhodes
- Rookwood
- Silverwater
- Strathfield
- Sydney Olympic Park
- Wentworth Point
குறித்த பகுதிகளில் உள்ள ஒருவர் கோவிட் தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கலாம் அல்லது தொற்றுக்காலம் முடிவடைந்த ஒருவரின் உடலிலிருந்து வைரஸ் துணிக்கைகள் வெளியேறிக்கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


