அமெரிக்க விஞ்ஞானிகள் David Julius மற்றும் Ardem Patapoutian இருவரும், இவ்வருடம் மருத்துவம் அல்லது உடலியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்கள்.

முக்கிய விடயங்கள்:
- மிளகாயில் உள்ள செயலில் உள்ள கூறுகளைப் பயன்படுத்தி, மனித உடலில் வெப்பத்தை உணரும் ஏற்பிகளை David Julius கண்டறிந்தார்.
- இயந்திர தூண்டுதலுக்கு பதிலளிக்கும் அழுத்த உணர்திறன் ஏற்பிகளை Ardem Patapoutian கண்டறிந்தார்.
- இந்தக் கண்டுபிடிப்புகள் “இயற்கையின் இரகசியங்களை” வெளிக்கொணர்ந்திருக்கின்றன என்று நோபல் குழுவின் செயலாளர் நாயகம் கூறினார்.
சூடு சுறணை என்பதை நாம் எப்படி உணர்கிறோம்?
Image
நோபல் பரிசு
மதிப்புமிக்க நோபல் விருது, தங்கப் பதக்கம் மற்றும் 10 மில்லியன் Swedish kronor பணமும் (1.6 மில்லியனுக்கும் அதிகமான தொகை) இவர்களுக்குப் பரிசாக வழங்கப்படும்.
இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகளில் முதலில் அறிவிக்கப்பட்ட பரிசு இதுவாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்த பணி புரிந்தவர்களுக்கான பரிசுகள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
