NSW வெள்ளம் இப்போது ஆஸ்திரேலியாவின் மிகவும் செலவுகூடிய இயற்கை பேரழிவாக கருதப்படுகிறது, இந்த ஆண்டு இதுவரை $5.5 பில்லியன்களுக்கு காப்பீட்டு உரிமைகோரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Forbes மேயர் Phyllis Miller கருத்துப்படி, சில குடியிருப்பாளர்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கைகள் இனி புதுப்பிக்கப்படாது என்ற அறிவிப்பைப் பெற்றுள்ளனர்.
Eugowra போன்ற நகரங்களுக்கு காப்பீட்டு வசதியை வழங்குவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது என்று ஆஸ்திரேலியாவின் இன்சூரன்ஸ் கவுன்சிலின் (ICA) தலைமை நிர்வாகி Andrew Hall தெரிவித்தார்.
Wakool Junction, Boundary Bend, மற்றும் Euston ஆகிய இடங்களில் 1975 வெள்ளத்தின் போது பதிவானதை விட நீர்மட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
Wilcannia மற்றும் Burtundyயில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Brewarrina, Bourke, Louth, Tilpa, Warren, Mudall, Mulgawarrina, Gongolgon, Jemalong, Hillston, Hay, Balnarald மற்றும் Moulamein ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் தொடர்கிறது.
Moulamein "டிசம்பர் வரை" தனிமைப்படுத்தப்படலாம் என்று வானிலை ஆய்வுப் பணியக மூத்த வானிலை ஆய்வாளர் Miriam Bradbury அஞ்சுகிறார்.
Euabalong வாசிகள் நேற்று வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர், அதே நேரத்தில் Condobolin மற்றும் Derriwong மக்கள் இப்போது அவதானத்துடன் வீடு திரும்பலாம்.
Eden Coastஇல் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hunter Coast, Sydney Coast, Illawarra Coast, Batemans Coast மற்றும் Eden Coast ஆகிய பகுதிகளில் இன்று rock fishing, படகு சவாரி செய்தல், நீச்சல் அடித்தல் போன்ற கடலோர நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கிடையில், Murray ஆற்றங்கரையில் உள்ள தெற்கு ஆஸ்திரேலிய மக்கள் வெள்ள நீர் அதிகரிப்பிற்கு தயாராகி வருகின்றன.
விக்டோரியாவில், Central Gippsland Coast மற்றும் East Gippsland Coastக்கு இன்றும் நாளையும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share

