SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் முதியோர் இல்ல பணியாளர் உட்பட 18 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NSW Premier Gladys Berejiklian at a press conference to provide a COVID-19 update in Sydney, Monday, July 5, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
NSW Premier Gladys Berejiklian at a press conference to provide a COVID-19 update in Sydney, Monday, July 5, 2021. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

இவர்களில் ஒருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் பணிபுரிபவர் என குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக குறித்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மேலும் இரு பணியாளர்களுக்கும் ஐந்து முதியோர்களுக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதேநேரம் குறித்த 18 பேரில் 11 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் ஐவர் பகுதியளவில் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் இருவர் மாத்திரமே நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக தொற்று கண்டவர்களில் 16 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் 32,136 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

NSW மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள stay-at-home  உத்தரவிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்றும் இக்கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் நாளையதினம் அறிவிக்கவுள்ளதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now