நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் regional பகுதிகளில் குடியமர்வதற்கான Skilled Work Regional visa (Subclass 491) தொழிற்பட்டியலில் புதிதாக பல வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பல வேலைகளுடன் சேர்த்து விரிவாக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்பட்டியல் இன்று 1ம் திகதியிலிருந்து நடைமுறைக்குவருகிறது.
Skilled Work Regional visa (Subclass 491) என்பது தொழில்தகைமை வாய்ந்த பணியாளர்களுக்கான provisional விசாவாகும்.
இந்த விசாவின் கீழ் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் regional பகுதிகளில் முக்கிய துறைகளில் பணிபுரிவதற்கான தகுதிவாய்ந்த தொழிலாளர்களை மாநில அரசு nominate செய்ய முடியும்.
அதேநேரம் ஏப்ரல் 1ம் திகதியிலிருந்து குறித்த விசாவுக்கு 'Living and working outside of regional NSW’ stream-க்கு கீழ் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் Stream 1 (Living and working in regional NSW) மற்றும் Stream 2 (Recently completed study in regional NSW) ஊடாக விண்ணப்பதாரிகள் தொடர்ந்தும் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.