SKIP TO MAIN CONTENT

படகுமூலம் வந்தோருக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுகிறது!

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும், 'சட்டவிரோதமாகப்' படகு மூலம் வந்தோருக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள், சேவைகள் என்பன ஜூலை 1ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளன. இதன்மூலம் அரசானது ஏறத்தாழ $50 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென எதிர்பார்க்கிறது.

 ‘Boat people’ intercepted
File Image Source: Getty

1 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content
cc
‘Boat people’ to be cut off from welfare in Immigration Budget measure' Source: AAP

ஆஸ்திரேலியாவில் பலவருடங்களாக முறையான விசா இல்லாமல்  வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளனர்.

புதிய வரவு-செலவுத்திட்ட நடவடிக்கையின் கீழ், படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த 2,000 க்கும் அதிகமானோர் தாம் பெற்றுவரும் வருமான உதவி மற்றும் வாடகை உதவி ஆகியனவற்றை வருகிற ஜூலை 1ம் திகதியிலிருந்து இழக்கவுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமாக (‘illegal maritime arrivals’) இங்கு வந்தோரில் சிலர் எவ்வித விசாவுக்கும் விண்ணப்பிக்காமல் 2012ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களை விசாவுக்கு விண்ணப்பிக்கச் செய்யும் முயற்சியாக, 90 நாட்களுக்குள் விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி கோரும் கடிதங்களை குடிவரவுத் திணைக்களம் அனுப்பிவைத்துள்ளது. 90 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அவர்கள் சமர்ப்பிக்கவில்லையென்றால் அவர்கள் பெற்றுவரும் ஆதரவு சேவைகள் நிறுத்தப்படலாம் என்று அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

More than 2,000 people who arrived in Australia by boat could be cut off from income support and rental assistance by July next year under a new Budget measure, according to the Immigration Department.

தற்போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசம்  முடிவடைந்துவிட்ட நிலையில் சுமார் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் தாம் அரசிடம் பெற்றுவந்த மானியத்தினை இழக்கவுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் $47 மில்லியன் டொலர்களை அரசு சேமிக்கவுள்ளதுடன் கடல்வழி வந்து இங்கு எதுவித விசாவுமில்லாமல் இருப்போரினால் அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

In the last twenty years, sixty thousand 'boat people' have arrived in Australia. How we deal with them when they get here continues to polarise public opinion - asylum seekers


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now