SKIP TO MAIN CONTENT

அகதிகள் படகுடன் தொடர்புடையவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை தீர்ப்பு

ஆஸ்திரேலியா வருவதற்கென ஆட்கடத்தல் படகொன்றை ஏற்பாடு செய்து, 350 க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

AFP29870.jpg

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

2001ம் ஆண்டு SIEV X எனப்படும் மீன்பிடிப் படகில், ஆட்களை ஏற்றிச் செல்வதற்குப் பொறுப்பான குழுவில் அங்கம்வகித்தவரான ஈராக்கிய பின்னணி கொண்ட நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

46 வயதுடைய இந்நபருக்கான தண்டனை, பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றில் கடந்த புதன்கிழமை அக்டோபர் 26ம் திகதி விதிக்கப்பட்டது.

19 அக்டோபர் 2001 அன்று குறித்த படகு சர்வதேச கடலில் மூழ்கியதில், 350 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். படகிலிருந்த 45 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

இப்படகு விபத்திற்குக் காரணமானவர்களை கண்டறியும் விசாரணைகளை அக்டோபர் 2001 இல் AFP தொடங்கியது.

விரிவான விசாரணையைத் தொடர்ந்து குறித்த நபர் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

2001ம் ஆண்டு 24 வயதாக இருந்த அந்த நபர், பயணிகளிடமிருந்து பணம் பெற்று, இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும்வகையில், அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றிருந்தது.

நீதியைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் எடுத்தாலும், ஆட்கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவதில் AFP உறுதியாக உள்ளது என AFP இன் Leading Senior Constable Mike Sloan தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தவிர நீதிமன்ற வழக்கை எதிர்கொண்ட மேலும் இருவர் 2001 ஆட்கடத்தல் முயற்சியில் தங்கள் பங்கிற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now