SKIP TO MAIN CONTENT

IS அமைப்புக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் சிட்னி இளைஞர் கைது!

சிட்னியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் IS அமைப்பினருக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

A supplied imaged obtained on Saturday, 19 June, 2021, shows the arrest of a 24-year-old Sydney man following raids in Chester Hill and Sefton.
A supplied imaged obtained on Saturday, 19 June, 2021, shows the arrest of a 24-year-old Sydney man following raids in Chester Hill and Sefton. Source: NSW POLICE FORCE

2 min read

Published

Updated


Skip to article content

Chester Hill மற்றும் Sefton ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத அமைப்பொன்றின் அங்கத்தவராக செயற்பட்டார் என்ற அடிப்படையில் இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்துவைத்திருந்ததாகவும், வெடிமருந்து செய்முறைகளை வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

A supplied imaged obtained on Saturday, 19 June, 2021, shows the arrest of a 24-year-old Sydney man following raids in Chester Hill and Sefton
A supplied imaged obtained on Saturday, 19 June, 2021, shows the arrest of a 24-year-old Sydney man following raids in Chester Hill and Sefton Source: NSW POLICE FORCE

கடந்த 7 மாதங்களாக இந்த இளைஞர் மீதான விசாரணைகளை Australian Federal Police மற்றும் NSW பொலிஸார் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இந்த இளைஞரின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் அவரது நடவடிக்கைகள் வெறுப்பையும் தீவிரவாதத்தையும் வெளிப்படுத்தி நிற்பதாகவும் AFP commander Stephen Dametto  தெரிவித்தார்.

IS அமைப்பு தொடர்ந்தும் பாரிய அச்சுறுத்தலான ஒன்றாக காணப்படுவதாகவும் ஆஸ்திரேலிய மக்களை இந்த அமைப்பினர் தீவிரவாதத்தைநோக்கி இழுக்க முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now