ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.
சில பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்டு 5-6 க்கான பிரிவில் தீக்சிதா வெற்றிபெற்றார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தீக்சிதா தற்போது மெல்பனில் வாழ்ந்துவரும் அதேநேரம் Haileybury கல்லூரியில் கல்விகற்கிறார்.
குறித்த போட்டியில் வழங்கப்பட்ட 30 சொற்களில் 29 சொற்களை தீக்சிதா சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்திருந்தார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ள தீக்சிதா, வேகமும் துல்லியமும் தனது பலம் எனக் கூறினார்.
அதேநேரம் சொற்களை எழுத்துக்கூட்டி வாசிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனவும், இப்போட்டியையொட்டி தான் பல ஆயிரக்கணக்கான சொற்களை வாசித்து பயிற்சிபெற்றுக்கொண்டதாகவும் தீக்சிதா தெரிவித்தார்.
2021ம் ஆண்டுக்கான Prime Minister’s Spelling Bee போட்டியில் ஆண்டு 3-4 க்கான பிரிவில் 10 வயது Arielle Wong-உம் ஆண்டு 7-8 க்கான பிரிவில் 12 வயது Evan Luc-Tran-உம் வெற்றிபெற்றனர்.
குறித்த போட்டியில் மொத்தமாக 490 பள்ளிகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தேசியரீதியில் வெற்றிபெற்ற இவர்கள் மூவரும் விரைவில் கன்பரா சென்று பிரதமர் ஸ்கொட் மொறிசனை நேரில் சந்திக்கவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் iPads, புத்தகங்கள், பள்ளிக்கான $1000 கூப்பன்கள் உட்பட பல பரிசுகளும் இவர்களுக்குக் காத்திருக்கின்றன.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.