பிரபல 'Spelling Bee' ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி பிரதமரை சந்தித்தார்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்ச் சிறுமி பிரதமரைச் சந்தித்து பரிசுகளைப் பெற்றுக்கொண்டார்.

Spelling Bee

Prime Minister Scott Morrison congratulates Theekshitha Karthik on winning the 2021 National Spelling Bee competition. Source: (AAP Image/Lukas Coch)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும்  Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் 11 வயது தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் அவர் பிரதமர் Scott Morrison-இடமிருந்து பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டார்.

சில பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்டு 5-6 க்கான பிரிவில் தீக்சிதா வெற்றிபெற்றார்.

இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தீக்சிதா தற்போது மெல்பனில் வாழ்ந்துவரும் அதேநேரம் Haileybury கல்லூரியில் கல்விகற்கிறார்.

குறித்த போட்டியில் வழங்கப்பட்ட 30 சொற்களில் 29 சொற்களை தீக்சிதா சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்திருந்தார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக SBS தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த தீக்சிதா, வேகமும் துல்லியமும் தனது பலம் எனக் கூறினார்.

அதேநேரம் சொற்களை எழுத்துக்கூட்டி வாசிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனவும், இப்போட்டியையொட்டி தான் பல ஆயிரக்கணக்கான சொற்களை வாசித்து பயிற்சிபெற்றுக்கொண்டதாகவும் தீக்சிதா தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான Prime Minister’s Spelling Bee போட்டியில் ஆண்டு 3-4 க்கான பிரிவில் 10 வயது Arielle Wong-உம் ஆண்டு 7-8 க்கான பிரிவில் 12 வயது Evan Luc-Tran-உம் வெற்றிபெற்றனர்.

குறித்த போட்டியில் மொத்தமாக 490 பள்ளிகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

தேசியரீதியில் வெற்றிபெற்ற இவர்கள் மூவரும் கன்பரா சென்று பிரதமர் Scott Morrison-ஐ நேரில் சந்திப்பதற்கான பயண மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்ததுடன் இச்சந்திப்பின்போது கல்வியமைச்சர் Alan Tudge-உம் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

Spelling Bee
Prime Minister Scott Morrison and Australian Education Minister Alan Tudge pose for photographs with the 2021 National Spelling Bee competition winners Source: (AAP Image/Lukas Coch)

வெற்றிபெற்ற மூவருக்கும்  iPads, புத்தகங்கள், பள்ளிக்கான $1000 கூப்பன்கள்  போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு Prime Minister’s Spelling Bee போட்டியில் பங்கேற்பதற்கு  ஜுலை25 முதல் பதிவுசெய்ய முடியும்.

மேலதிக விவரங்களுக்கு : www.spelling-bee.com.au


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now