Qantas Boeing 737 விமானம் நேற்று புதன்கிழமை பிற்பகல் பசிபிக் பெருங்கடலிற்கு மேலே பறக்கும் போது பேரிடர் அழைப்பு விடுத்தது.
"ஆரம்பத்தில் mayday எச்சரிக்கை அறிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அது PAN சாத்தியமான உதவி தேவை என்று குறைக்கப்பட்டது " என்று Qantas செய்தித் தொடர்பாளர் நேற்று மாலை AAP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
விமானம் நேற்று மதியம் 3.30 மணியளவில் (AEDT) பாதுகாப்பாக தரையிறங்கியது, பின்னர் விமான பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
AirlineRatings.com கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியிட்ட 2023ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் பட்டியலில் Qantas விமானசேவை நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் பறந்துக்கொண்டிருக்கும் போது அதன் ஒரு இயந்திரம் பழுதானதினால் அதன் இயக்கம் நிறுத்தப்படுவது அரிதானவை என்றாலும் விமானிகளுக்கு அதனை பாதுகாப்பாக நிர்வகிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் விமானம் ஒரு இயந்திரத்தில் நீண்ட நேரமாக பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று Qantas தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த 145 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

Mayday ஆபத்து என்ற அவசர அழைப்பு விடுக்கப்பட்டது ஆச்சிரியம் அளிப்பதாகவும் ஏனெனில் இறக்கப் போகின்ற பெரிய உடனடி ஆபத்தில் இருந்தால் மட்டுமே விமானிகள் இந்த அழைப்பை விடுப்பதாக Boeing 737-800 விமானங்களில் விமானியாக பல ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் விமானி Keith Tonkin.
இது விமானப் போக்குவரத்துத் துறையை பாதிக்கலாம் எனவும் திரு Tonkin தெரிவித்தார்.
விமானத்தின் இடது இயந்திரம் செயலிழந்தது என்றும் ஆனால் விமானத்தில் இருந்த யாரும் பீதி அடையவில்லை என விமானத்தை விட்டு வெளியேறிய பயணிகள் நிருபர்களிடம் கூறினர்.
விமானம் தரையிறங்கி வெளியே வரும் போது அங்கு காத்திருந்த கமராக்களைப் பார்க்கும் வரை, நிலைமை எவ்வளவு தீவிரமானது என்பதை உணரவில்லை எனவும் பயணி ஒருவர் தெரிவித்தார்.
விமானம் ஆபத்தான மற்றும் உடனடி ஆபத்தில் இருக்கும்போது, உடனடி உதவி தேவைப்படும்போது mayday அழைப்பு வழங்கப்படுகிறது என பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதிசெய்வதற்கு பொறுப்பான Airservices Australia தெரிவித்துள்ளது.
ஒரு முன்னெச்சரிக்கையாக சிட்னி விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் உட்பட அவசரகால பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
