'தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது' -NSW

நியூ சவுத் மாநிலத்தை வந்தடையும் வெளிநாட்டு மாணவர்கள், ஆஸ்திரேலியாவினால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியின் இரு சுற்றுக்களையும் பெற்றிருந்தால், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என மாநில Premier Dominic Perrottet அறிவித்துள்ளார்.

Students at Sydney's UNSW.

Source: AP/Mark Baker

வெளிநாட்டு மாணவர்களை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மீண்டும் வரவழைப்பது தொடர்பிலான பரீட்சார்த்த முயற்சியின்கீழ், முதல் தொகுதி மாணவர்கள் எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி சிட்னியை வந்தடையவுள்ளனர்.

இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது விமானத்தின் மூலம், இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், சீனா மற்றும் கனடாவைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் சிட்னியை வந்தடையவுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் Therapeutic Goods Administration (TGA)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியைப் போட்டிருக்கும்பட்சத்தில், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகத் தேவையில்லை என நியூ சவுத் மாநில Premier Dominic Perrottet இன்று அறிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கையின் அடுத்தகட்ட மைல்கல்லை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் எட்டிவிட்டதாக தெரிவித்த Premier Dominic Perrottet, வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் வரவேற்பதில் தாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மாநில பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

நியூ சவுத் வேல்ஸ் வரும் மாணவர்கள் ஆஸ்திரேலிய அரசின் அனுமதியைப் பெறவேண்டியுள்ள நிலையில், இவ்விடயத்தில் அரசு வழங்கும் ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக Premier Dominic Perrottet தெரிவித்தார்.

இதேவேளை இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு விமானமும் அடுத்த மாதம் சிட்னியை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


3 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now