SKIP TO MAIN CONTENT

உஷார் - பணம் திருப்பி தருவதாக கூறும் 'myGov' மின்னஞ்சல் மோசடி!!

நூற்றுக்கணக்கான டாலர்கள் பணத்தை myGov திருப்பி வழங்குவதாக கூறி வரும் மின்னஞ்சல் இணைய மோசடி குறித்து ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

myGov
myGov

1 min read

Published

Updated

By Selvi

Source: SBS


Skip to article content

myGov-இலிருந்து "நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல்" என்ற தலைப்புடன் வரும் இந்த மின்னஞ்சல் அரச நிறுவனத்திடமிருந்து வருவதுபோல் காட்சியளிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. ஆகவே மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்கும்படியும் புது வருடத்திற்கு வழங்கப்படும் cash boost ஊக்கத்தொகை என தவறுதலாக எண்ணி அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை அழுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கப்டுகிறது.

Cyber scam offering hundreds of dollars in myGov refunds
Credit: MailGuard

வேகமாக இணையம் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள இணைப்பை அழுத்தும்படி அந்த மின்னஞ்சல் செய்தியில் இருக்கும். அந்த பணத்தொகை $640 முதல் $2200 வரை இருக்கக்கூடும் என்று MailGuard எச்சரித்துள்ளது.

இணைப்பை சொடுக்கி அப்பக்கத்திற்குள் சென்றால் உங்களின் முழு விபரங்கள், கிரெடிட் கார்டு எண், CVV எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை ஒரு படிவத்தில் நிரப்பும்படி கேட்கப்படும், அவ்வாறு செய்தால் மட்டுமே பணத்தை பெற முடியும் என்றும் இந்த இணைய மோசடிக்காரர்கள் வலியுறுத்துகின்றனர் என MailGuard தெரிவித்துள்ளது.

myGov சேவையை வழங்கி வரும் Services Australia, இந்த மின்னஞ்சல் மோசடி குறித்து அறிந்திருப்பதாகவும் myGov கணக்கில் உள்நுழையுமாறு இணைப்புக்கொண்ட SMS அல்லது மின்னஞ்சல் எதுவும் அனுப்பமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இப்படியான மோசடி மின்னஞ்சல் வந்தால் திறந்து பார்க்காமல் உடனே நீக்கிவிடும்படியும் Services Australia அறிவுறுத்தியுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now