மெல்பனை சேர்ந்த பெண் ஒருவர் மஞ்சள் விளக்கு ஒளிரும் போது அதனை கடந்து வாகனத்தை ஒட்டி சென்றதால் போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனத்தை நிறுத்திய போலீசார் அவருக்கு $500 டாலர்கள் அபராதம் விதித்துள்ளார். அதோடு அவர் demerit புள்ளிகளையும் இழந்துள்ளார்.
மஞ்சள் விளக்கு ஒளிரும் போது சாலை போக்குவரத்தில் அதனை கடந்து வாகனத்தை ஒட்டி செல்ல வேண்டிய பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். நூறு சதவீதம் தேவையில்லாத பட்சத்தின் போது மஞ்சள் விளக்கை கடந்து வாகனத்தை ஒட்டி செல்வது சட்டவிரோதமானது. இதன் காரணமாகவே அப்பெண்மணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
NSW மாநிலத்தின் 10 தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சாலை விதிகளில் இந்தக் குற்றமும் ஒன்றாகும் என்று NSW அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்கள் மஞ்சள் விளக்கில் பாதுகாப்பற்றதாக இல்லாத சமயத்தில் நிறுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என NSW போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக்கு குற்றம் என்று வரும் போது மஞ்சள் விளக்கு சிவப்பு விளக்கு போலவே கருதப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
