SBS Spice என்பது 20-34 வயதுடைய தெற்காசிய பின்னணி கொண்ட ஆஸ்திரேலியர்களுக்கான ஒரு அற்புதமான புதிய ஆங்கில மொழி டிஜிட்டல் தளம். அடையாளம், பாரம்பரியத் தேடல், சமூக மாற்றம், பாப் கலாச்சாரம், அரசியல் என்று சூடான தலைப்புகளில் தனித்துவமான, முற்போக்கான சிந்தனைகளுடன் நிகழ்ச்சிகள்!
இங்கு பிறந்த மற்றும் புதிதாக குடியேறிய இளம் தெற்காசிய ஆஸ்திரேலியர்களுக்கு துடிப்பான பெரும் சமூகத்தோடு இணைய SBS Spice பணியாற்ற வருகிறது. மாறுபட்ட கருத்துக்கள், சிந்தனைகளுடன், சமகால ஆஸ்திரேலிய பார்வையுடன் SBS Spice.
சமூக ஊடகங்களில் ஆர்வமாக இருக்கும் தெற்காசிய பாரம்பரியம் கொண்ட இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் தாங்கள் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் என்பதற்கான கதைகளை கலாச்சார ரீதியாக வடிவமைப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்று SBS Spice நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் தில்பிரீத் கவுர் தாகர் கூறுகிறார். இந்தியாவில் பிறந்த அவர் South Asian Todayயின் நிறுவனர் மற்றும் சமூக நுணுக்கங்களை ஆராய்ந்து மாறுபட்ட கண்ணோட்டங்களை தருவதில் பெயர் பெற்றவர்.
SBS Spice யில் முற்போக்கான, சிந்தனையைத் தூண்டும் மற்றும் சூடான விவாதங்களை கிளப்பும் உரையாடல்களை டாகர் தரவுள்ளார். மட்டுமல்ல, பாலிவுட் தகவல் கில்லாடியான ஆஸ்திரேலிய இந்தோ-பிஜியன் பத்திரிகையாளரான சுஹைலா ஷெரீப் தொகுத்து வழங்கவுள்ளார்.

New kids on the block: SBS Spice’s Dilpreet Kaur Taggar, Executive Producer (R) and Suhayla Sharif, Digital Content Producer (L) .
- ஸ்கேன் - வெவ்வேறு கண்ணோட்டங்களுடன், உள்ளூர் மற்றும் உலகளாவிய தலைப்புச் செய்திகளுக்குப் பின்னாலிருப்பவற்றை ஆராயும் குறுகிய விளக்கத் தொடர்.
- Two Chillies in a Pod எனும் நீண்ட போட்காஸ்ட் நிகழ்ச்சிகள். வோக் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர் மேகா கபூர், பயண ஸ்பெஷல் பிரியா சர்மா, நிகழ்ச்சிகளை உருவாக்கும் ஜெரமி பிராங்கோ, சமூக சேவகர் அமர் சிங், நடிகர்கள் சஹானா கோஸ்வாமி மற்றும் ஆயிஷா மடோன் உட்பட ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தெற்காசிய பின்னணி கொண்ட பிரபலங்களின் நேர்காணல்கள்.
- Spice Express எனும் குறுகிய வடிவ போட்காஸ்ட்கள் – தெற்காசிய சமூகம் தொடர்பான அம்சங்களை அவர்களுக்கு அவர்கள் மொழியில் கூறும், உணரவைக்கும்.
SBS Spice நிகழ்ச்சிகள் SBS Audio App, website, YouTube, Instagram, Facebook மற்றும் போட்காஸ்ட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளும் அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.
தொடர்புடையவை
- SBS PopDesi இப்போது SBS South Asian என்று பெயர் மாறுகிறது! இந்திய துணைக் கண்டத்திலிருந்து 10 மொழிகளில் செய்தி, பொழுதுபோக்கு மற்றும் இசை என்று அனைத்தும் ஒரே இடத்தில்!
- Australia Explained எனும் நிகழ்ச்சி புதிதாக நாட்டில் குடியேறியவர்களுக்கு அன்றாட சமூக மற்றும் குடிமை வாழ்க்கையில் பங்கேற்பதற்குத் தேவையான நடைமுறைத் தகவல்களை வழங்குகிறது. இது தெற்காசிய மற்றும் பிற மொழிகளில் கிடைக்கிறது.
- ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்காசிய பின்னனிகொண்டவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் SBS வழங்கும் முழு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும், அது குறித்த பொதுவான கேள்விகளையும் நீங்கள் இங்கு பார்க்கலாம்.