பலதரப்பட்ட தெற்காசிய ஆஸ்திரேலிய மக்களுக்கான நிகழ்ச்சிகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் SBS PopDesi, SBS South Asian என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்களா, குஜராத்தி, இந்தி, நேபாளி, மலையாளம், பஞ்சாபி, சிங்களம், தமிழ் மற்றும் உருது ஆகிய மொழிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும், அனைத்து சிறந்த பாலிவுட் (இந்தி), பாங்க்ரா (பஞ்சாபி) மற்றும் நேபாளி பாடல்களைக் கொண்ட விரிவான இசை playlistகளையும் SBS South Asian கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளும், podcast, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக கிடைக்கின்றன.
"தெற்காசியர்கள் ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர் சமூகமாகும். 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வீட்டில் இந்திய துணைக் கண்டத்தின் ஏதோவொரு மொழியைப் பேசுகிறார்கள். தற்கால ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றும் அதனைச் செழுமைப்படுத்தும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் இந்த பன்முகத்தன்மையை வெளிக்கொண்டுவரும்வகையில் SBS தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று SBS South Asian திட்ட மேலாளர் Manpreet Kaur Singh கூறினார்.
SBS South Asian நிகழ்ச்சிகள் வார நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பப்படும். மேலும் நாளின் எந்த நேரத்திலும் on demand-இல் கிடைக்கும்.
DAB, டிஜிட்டல் TV (Channel 305), மற்றும் ஒரு பிரத்தியேக YouTube channel அத்துடன் SBS Audio App மற்றும் இணையதளம் வழியாக tune செய்யுங்கள். நேரலை வானொலி அட்டவணை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது
மொழி | நாள் மற்றும் நேரம் |
பங்களா | திங்கள் மற்றும் வியாழன் 3:00PM |
குஜராத்தி | புதன் மற்றும் வெள்ளி 2:00PM |
இந்தி | திங்கள் முதல் ஞாயிறு வரை 5:00PM |
மலையாளம் | வியாழன் மற்றும் வெள்ளி 1:00PM |
நேபாளி | செவ்வாய் மற்றும் வியாழன் 2:00PM |
பஞ்சாபி | திங்கள் முதல் வெள்ளி 4:00PM |
சிங்களம் | திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி 11:00AM |
தமிழ் | திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி 12:00PM |
உருது | புதன் மற்றும் வெள்ளி 3:00pm |
ஒவ்வொரு SBS South Asian மொழி நிகழ்ச்சியும் அதன் சொந்த Facebook பக்கத்தையும் இருமொழி இணையதளத்தையும் கொண்டுள்ளது. போட்காஸ்ட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளும் அனைத்து தளங்களிலும் SBS South Asian மொழி நிகழ்ச்சிகள் கிடைக்கின்றன.
தொடர்புடையவை:
- SBS Spice என்ற புதிய ஆங்கில மொழி நிகழ்ச்சி தெற்காசிய பாரம்பரியத்தைக் கொண்ட Gen Y தலைமுறைக்கானது. அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரக் கதைகளை வடிவமைக்கவும், சமூக ஊடகங்கள் மூலம் தகவலையும், பொழுதுபோக்கு அம்சங்களை பெறவும் SBS Spice உதவுகிறது.
- Australia Explained எனும் நிகழ்ச்சி புதிதாக நாட்டில் குடியேறியவர்களுக்கு அன்றாட சமூக மற்றும் குடிமை வாழ்க்கையில் பங்கேற்பதற்குத் தேவையான நடைமுறைத் தகவல்களை வழங்குகிறது. இது தெற்காசிய மற்றும் பிற மொழிகளில் கிடைக்கிறது.
- ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்காசிய பின்னனிகொண்டவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் SBS வழங்கும் முழு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும், அது குறித்த பொதுவான கேள்விகளையும் நீங்கள் இங்கு பார்க்கலாம்.