2016 ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 16 பேரை நாம் நேர்கண்டிருந்தோம். அவர்கள் கட்சி சார்ந்த கொள்கைகள் குறித்த விளக்கம் கேட்க சிலரையும், தமிழர் என்ற அடையாளம் கொண்டுள்ளமையால் சிலரையும் நாம் நேர்கண்டிருந்தோம். அவர்களில் 9 பேர், House of Representatives என்று சொல்லப்படும் கீழ் சபையில் போட்டியிட்டவர்கள். அவர்கள் தேர்தலில் எத்தனை வாக்குகளைப் பெற்றார்கள் என்ற விபரங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். அத்துடன் அவர்கள் எமக்கு வழங்கிய நேர்காணலை நீங்கள் மீண்டும் கேட்க விரும்பினால் அதற்கான இணைப்பையும் தந்திருக்கிறோம்.
செனட் சபைக்குப் போட்டியிட்ட 6 பேருடைய வாக்குக் கணக்கு இன்னமும் சரியாகத் தெரியாத நிலையில் அவர்கள் பெற்ற வாக்கு விபரம் இங்கே தரப்படவில்லை. ஆனால், அவர்களது நேர்காணலை நீங்கள் மீண்டும் கேட்க இணைப்பு தரப்பட்டுள்ளது.
மேலேயுள்ள வரைபடத்தில், வேட்பாளரின் பெயருக்கெதிராக அவர்கள் பெற்ற முதன்மை வாக்குகள் (Primary votes) சிறிய எழுத்தில் தரப்பட்டுள்ளன. Preferential votes எனப்படும் விருப்பு வாக்குளையும் சேர்த்த தொகை பெரிய, வெள்ளை எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. சிவப்பும் பச்சையும் சேர்ந்தது மொத்தமாக அந்தத் தொகுதியில் பெறப்பட்ட வாக்குகள். வேட்பாளர் வென்றிருந்தால் அவரது வாக்குகள் சிவப்பு நிறத்திலும் வெல்லவில்லை என்றால் பச்சை நிறத்திலும் அமைந்திருக்கின்றன.
கீழேயுள்ள அட்டவணையில், வேட்பாளர்கள் எமக்கு வழங்கிய நேர்காணலின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு வேட்பாளருடைய தொகுதி குறித்த மேலதிக தரவுகளையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். AEC என்பது ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் தரும் தகவல். அதேபோல், abc என்பது abc ஊடகம் தரும் தகவல்.
