மெல்பனைச் சேர்ந்த பெண் ஒருவர் Woolworths-இலிருந்து வாங்கிய திராட்சைப்பழ பையினுள் 'எலிக்குஞ்சு' ஒன்று காணப்பட்டதாக முறையிட்டிருந்தநிலையில் இதுதொடர்பில் தமது விசாரணை தொடர்வதாக Woolworths தெரிவித்துள்ளது.
மெல்பனின் Bentleigh பகுதியிலுள்ள Woolworths-இலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட திராட்சைப்பழ பையினுள் மிகச்சிறிய அளவிலான எலிக்குஞ்சு/கரு காணப்பட்டதாக Emma என்ற பெண் சமூகவலைத்தளத்தினூடாக Woolworths-இடம் முறையிட்டிருந்தார்.
இதுகுறித்த புகைப்படத்தையும் Emma பதிவிட்டிருந்தார்.
குறித்த திராட்சைப்பழப் பையினை உடனடியாகவே Bentleigh கிளையிடம் கொண்டுசென்று கொடுத்துவிட்டதாகவும் Emma குறிப்பிட்டிருந்தார்.

Source: Facebook
இந்த விடயத்தை தமது கவனத்திற்கு கொண்டுவந்தமை தொடர்பில் நன்றி தெரிவித்துள்ள Woolworths சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து இது தொடர்பில் ஆராய்வதாக குறித்த பெண்ணுக்கு பதிலளித்துள்ளது.
இச்செய்தி குறித்த பிந்திய விவரங்களை Woolworths நிர்வாகம் இன்னமும் வெளியிடவில்லை.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

