SKIP TO MAIN CONTENT

இன்றிரவு இருட்டில் இருக்கும் ஆஸ்திரேலியா!

The World Wildlife Fund என்ற அமைப்பின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட "Earth Hour" எனப்படும் புவி மணி, இன்றிரவு அவதானிக்கப்படுகிறது. இன்றிரவு 6 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் விளக்குகளை அணைத்து, இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 At 8.30pm Australian Eastern Time, Sydney residents turn off their lights for just one hour, as a sign of their commitment to reduce global warming.
At 8.30pm Australian Eastern Time, residents turn off their lights for just one hour, as a sign of their commitment to reduce global warming. Source: AAP

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP - SBS Wires



Skip to article content

காலநிலை மாற்றத்திற்கு நாம் அதிக பங்களிக்கிறோம் என்பதால், மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை இரவு, ஒரு மணி நேரத்திற்கு நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள், மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து வைத்து, காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவையை மக்கள் உணரவைக்க ஊக்குவிக்கும் முயற்சி தான் புவி மணி.

இந்த வருடம் புவி மணி, மார்ச் 24, 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை.

கரியமில உமிழ்வு (carbon emission) கடுமையாகக் குறைக்கப்படாவிட்டால் ஆஸ்திரேலியாவின் பறவை மற்றும் ஊர்வன இனங்களில் பாதி, நமது அடுத்த தலைமுறையுடன் அழிந்துவிடும் என்றும்; மூன்றில் இரண்டு பங்கு பாலூட்டிகள், கிட்டத்தட்ட 80 சதவீதமான நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை மற்றும் 60 சதவீத தாவரங்கள் மறைந்துவிடும் ஆபத்து உள்ளது என்று புவி மணி முயற்சியை முன்னெடுத்த WWF கூறுகிறது.

இது குறித்து நாம் 2016ம் ஆண்டு ஒலிபரப்பிய காலத்துளி நிகழ்ச்சி:  (கீழே உள்ள படத்தில் சொடுக்குங்கள்)

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now