சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள Downing Centre நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 நாட்கள் சிறைக்குப் பிறகு நிபந்தனையுடனான பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள குணதிலக்க, Tinder அல்லது வேறு ஏதேனும் dating செயலிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, அவர் தினமும் Eastwood பொலிஸ்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும். மற்றும் அவரது கடவுச்சீட்டையும் ஒப்படைக்க வேண்டும்.
இது தவிர தனுஷ்கவின் பிணைக்கு ஆதரவாக $200,000 செலுத்தப்பட்டதாகவும், இதில் $50,000 அவரது சொந்தப் பணம் எனவும், $150,000 மெல்பன் பெண் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Dating செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
If you or someone you know is impacted by sexual assault, call 1800RESPECT on 1800 737 732 or visit 1800RESPECT.org.au. In an emergency, call 000.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.