இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நேற்று செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்பட்டனர். இவர்கள் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். தவிரவும் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனும் களமிறங்கியிருந்தார். இவர்கள் தவிர இன்னும் 33 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

A handout photo made available by the Sri Lankan President's House shows Sri Lankan President Ranil Wickremesinghe (L) casting his vote at a polling station during the presidential election, in Colombo, Sri Lanka, 21 September 2024. Source: EPA / SRI LANKA PRESIDENT'S HOUSE HANDOUT/EPA
தபால் வாக்குகள் தொடக்கம் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அநுரகுமார திஸாநாயக்க அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாஸவும் மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளனர்.

A handout photo made available by the Sri Lankan Department of Government Information shows Sajith Premadasa, presidential candidate and leader of Sri Lanka's main opposition party Samagi Jana Balawegaya (SJB), leaves a polling station after casting his vote for presidential elections at a polling station, in Colombo, Sri Lanka, 21 September 2024. Credit: Department of Government Information HANDOUT/EPA
அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளப்பதிவில் தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தமது முடிவை எடுத்துள்ளனர் எனவும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கான மக்களின் ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடரந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர்களைத்தவிர மேலும் பலர் தமது சமூக வலைத்தளங்களில் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாயின.
இலங்கை அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமெனில், ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த அதிபர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

Anura Kumara Dissanayake (C), presidential candidate and leader of the opposition party National People's Power (NPP), leaves a polling station after casting his vote during the presidential election, in Colombo, Sri Lanka, 21 September 2024. Source: EPA / CHAMILA KARUNARATHNE/EPA
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும்.SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.