SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் காணாமல்போன இலங்கை மாணவனைத் தேடும் பணி தொடர்கிறது!

அடிலெய்டில் காணாமல்போன இலங்கை மாணவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

image (7).jpg
Kumudu Credit: SA Police & Facebook

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

தெற்கு ஆஸ்திரேலியாவில் காணாமல்போயுள்ள இலங்கைப் பின்னணிகொண்ட மாணவர் குமுது பண்டார தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு அம்மாநில காவல்துறை கோரியுள்ளது.

அடிலெயிட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்த 24 வயதான குமுதுவை கடந்த மே 8ம் திகதிக்குப் பிறகு காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது.

மே 8 திங்கள் அன்று Sefton Parkஇல் கடைசியாக இவர் காணப்பட்டதாகவும் அதன் பிறகு அவரிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லையெனவும் கூறப்படுகிறது.

குமுதுவை யாராவது பார்த்திருந்தால் அல்லது அவர் பற்றிய தகவல் தெரிந்தால், 131 444 என்ற காவல்துறை உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு 120469 என்ற அடையாள எண்ணைக் குறிப்பிடுமாறு கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் குமுதுவைக் கண்டுபிடிக்க உதவுமாறு மெல்பனில் உள்ள இலங்கை துணை தூதரகம் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை சமூகத்திடம் கோரியுள்ளது.

இந்த மாணவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மெல்பனில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை 03 9290 4200 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது mail@slcgmel.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now