வெளிநாட்டிலிருந்து பெண் ஒருவரை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் வீட்டுவேலைக்காரியாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிட்னி தம்பதியருக்கு அண்மையில் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸிலிருந்து மூன்று மாத விசாவில் அழைத்து வந்த பெண்ணை விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் கட்டாயமாக வீட்டில் வைத்திருந்து வேலை வாங்கினார்கள் என்றும் வேலைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட கொடுக்கவில்லை என்றும் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியர் இருவரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, ஆணுக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனையும் பெண்ணுக்கு மூன்றே கால் வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு சுமார் 70 ஆயிரம் டொலர்களை குறித்த தம்பதியர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மே மாதம் சுற்றுலா விசாவில் அழைத்துவரப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், மூன்று பிள்ளைகளை பராமரிப்பதற்கும், சமைப்பது உட்பட வீட்டு வேலைகளை செய்வதற்கும், அழைத்துவந்தவர்களின் கடையில் வேலைசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
இவரது விசாக்காலம் முடிவடைந்த பின்னர், இவரை வீட்டை விட்டு வெளியில் போகவேண்டாம் என்றும் வெளியில் யாருடனும் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண் தொடர்பான தகவல் ஆஸ்திரேலிய பெடரல் பொலீஸாருக்கு எட்டியதை அடுத்து, 2017 ஆம் ஆண்டு, விசாரணைகளை ஆரம்பித்த பொலீஸார், 2019 ஆம் ஆண்டு குற்றவாளிகளாக கருதப்பட்ட தம்பதியர் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, வழக்கு தொடர்ந்தனர்.
குறிப்பிட்ட பெண்ணை அடிமையாக வைத்திருந்தமை மற்றும் அவருக்கு குறைவான ஊதியம் வழங்கி வேலை வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களை கடந்த வருடம் 2020 இல் குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் ஒப்புக்கொண்டார்கள்.
வழக்கு விசாரணைகளில் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 47 வயது ஆணுக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனையும் 39 வயது பெண்ணுக்கு மூன்றே கால் வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
