இலங்கையிலிருந்து புகலிடம்தேடி ஆஸ்திரேலியா வந்து, தற்காலிக விசாவில் சிட்னியில் வசித்த சித்திரவேல் பத்மராஜேந்திரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 7ம் திகதி காலமானார்.
இவரது குடும்பத்தினர் இன்னமும் தற்காலிக ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, பத்மராஜேந்திரன் அவர்களின் இறுதிச்சடங்கு, சிட்னியில் எளிமையான முறையில் மேற்கொள்ளப்படுவதாக அகதிகள் செயற்பாட்டாளர் பாலா விக்கி அவர்கள் தெரிவித்தார்.
Castlebrook Memorial Park, Rouse Hill எனுமிடத்தில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிநிகழ்வு நடைபெறுகிறது.
இதேவேளை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய மரணங்கள் மிகுந்த கவலையளிப்பதாகத் பாலா விக்கி அவர்கள் தெரிவித்தார்.
நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் பலரும் மனச்சோர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இப்படியானவர்கள் உரிய மனநல உதவிகளைப் பெற்றுக்கொள்ளவதன் மூலம் தமது உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
இதேவேளை பத்மராஜேந்திரன் அவர்களின் இறுதிச்சடங்கிற்கு உதவ விரும்புபவர்கள் 0419 361 273 என்ற எண்ணில் பாலா விக்கி அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
If you are experiencing a personal crisis and need someone to talk to, please call: Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
