SKIP TO MAIN CONTENT

உங்களுக்கு Telstra, Optus & TPG வேகமற்ற இணையசேவை வழங்கியதா? பணத்தை திரும்பப்பெற வாய்ப்புள்ளது

இணையசேவையின் வேகம் தொடர்பில் பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் Telstra, Optus, TPG ஆகிய மூன்று தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

BeFunky-collage (5).jpg
Credit: Telstra, Optus and TPG

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

அத்துடன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீள வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குறித்த 3 நிறுவனங்களிடமிருந்தும் பணத்தை மீளப்பெறவுள்ளனர்.

கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், தமது இணையசேவையின் வேகம் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், Telstra, Optus, TPG ஆகிய 3 பெரிய நிறுவனங்களின் மீதும் Australian Competition and Consumer Commission வழக்குத்தொடர்ந்திருந்தது.

இவ்வழக்கை விசாரித்த பெடரல் நீதிமன்றம் குறித்த 3 நிறுவனங்களுக்கும் மொத்தம் 33.5 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

குறித்த நிறுவனங்கள் fibre-to-the node (FTTN) planகளில் 50Mbps அல்லது 100Mbps வேக இணையசேவையை வழங்குவதாக விளம்பரப்படுத்தியபோதிலும், அந்த வேகத்தில் சேவைகளை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என Australian Competition and Consumer Commission சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் இம்மூன்று நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு அவர்களது பணத்தை மீளச்செலுத்த ஆரம்பித்துள்ளன.

Telstra நிறுவனம் அபராதமாக 15 மில்லியன் டொலர்களை செலுத்தும் அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 11 மில்லியன் டொலர்களை கடந்த ஆண்டுமுதலே மீளச்செலுத்த ஆரம்பித்திருந்தது.

Optus நிறுவனம் அபராதமாக 13.5 மில்லியன் டொலர்களை செலுத்தும் அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6.5 மில்லியன் டொலர்களை இந்த ஆண்டு மீளச்செலுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளது.

TPG நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6.5 மில்லியன் டொலர்களை இந்த ஆண்டு மீளச்செலுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளதுடன், 5 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்துகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now