SKIP TO MAIN CONTENT

குறுஞ்செய்தி மோசடியில் இளம் தம்பதியினர் $98,000 இழந்தனர்!!

மெல்பனில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியினர் அவர்களுக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றினால் அவர்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர்.

scams
Source: Getty / Getty Images

1 min read

Published

Updated

By Selvi

Source: SBS


Skip to article content

மெல்பனை சேர்ந்த James Green மற்றும் Sarah Gerendasi இருவரும் என்ன நடந்தது என்பதை உணர்ந்தபோது செய்வதறியாது திகைத்து போனார்கள். தாங்கள் இழந்த நிதியில் ஒரு பகுதியை மட்டுமே தற்போது திரும்ப பெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு தான் வேலைக்குத் திரும்பிய போது 'Uber' நிறுவனத்தில் இருந்து வருவது போல் அடையாளப்படுத்திய குறுஞ்செய்தி தனக்கு வந்ததாக Channel Nine தொலைக்காட்சியின் Today நிகழ்ச்சியில் ஜேம்ஸ் தெரிவித்தார்.

Uber சேவையில் உள்ள தனது வங்கி கணக்கு விபரங்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும் அதனை புதுப்பிக்கும்படியும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் வேலையில் மும்முரமாகவும் சற்று சோர்வாகவும் இருந்த நேரத்தில் இந்த குறுஞ்செய்தி வந்தது. அது என் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாருக்குத் தெரியும்.
James Green

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைக் அழுத்திய பிறகு, மோசடி செய்பவர்கள் ஜேம்ஸின் Westpac வங்கிக் கணக்கிலிருந்து $98,000 டாலர்கள் பணத்தை திருடிவுள்ளனர்.

அந்த குறுஞ்செய்தியிலிருந்த இணைப்பை அழுத்தியவர் ஜேம்ஸ் என்பதினால் பறிபோன $98,000 டாலர்கள் பணத்தை திரும்ப பெற முடியாது என Westpac வங்கி தெரிவித்துள்ளது.

"இறுதியில் Westpac அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது, அடிப்படையில் நாங்கள் செய்ததைச் செய்திருக்கக் கூடாது " என்று ஜேம்ஸ் கூறினார்.

Wespac வங்கி தங்களது $98,000 டாலர்கள் இழப்பிற்கு $3000 டாலர்கள் மட்டுமே இழப்பீடாக கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார் ஜேம்ஸ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now