Human Rights Watch அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விவரம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவுடன் ஒப்பிடும்போது இக்காலப்பகுதி 12 மடங்கு அதிகம் என குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குடிவரவு தடுப்புமுகாமில் ஒருவர் தடுத்துவைக்கப்படும் சராசரி காலப்பகுதி அமெரிக்காவில் 55 நாட்களாகவும், கனடாவில் 14 நாட்களாகவும் காணப்படுகின்ற நிலையில், ஆஸ்திரேலியா எந்தளவு கடுமையாக இவ்விடயத்தைக் கையாளுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதாக Human Rights Watch அறிக்கை சாடியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்தக் கொடூரமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் எனவும் குறித்த அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் சுமார் 1459 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் எட்டுப்பேர் 10 ஆண்டுகளுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 117 பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
