ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலும் வாங்கக்கூடிய COVID-19 சோதனை கருவிகள் ஒருவருக்கு COVID-19 தொற்று இருக்கிறதா என்பதை விரைவில் கண்டுபிடிக்க உதவுகிறது. அத்துடன், தொற்றுநோய் பரவுவதை சமாளிக்க உதவுகிறது.
ஆனால் நம் நாட்டில், இப்படியான விரைவான Antigen சோதனைகளின் பயன்பாடு குறித்த விவாதம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருளை, உடலிலுள்ள நோய் எதிர்ப்புத் திறன் அடையாளம் கண்டு உடலினுள்ளே பிற பொருட்களை எதிர் கொள்ள உருவாக்கும் பிறபொருளெதிரிகளை உருவாகுவதைத் தூண்டக்கூடிய ஒரு மூலக் கூறு Antigen எனப்படும் பிறபொருளெதிரியாக்கி ஆகும்.
டெல்டா பரவலைக் கண்காணிக்கும் முயற்சியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது ஒரு நாளைக்கு 90,000ற்கும் அதிகமானவர்களைச் சோதித்து வருகிறது. ஆனால் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது சுகாதார அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.
வேலை இடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களில் விரைவான சோதனையைப் பரீட்சிக்கப் போவதாக அரசு சமீபத்தில் அறிவித்தது - ஆனால் முதியோர் பராமரிப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் அதனை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
விரைவான Antigen சோதனைகள் என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், அவை மலிவானவை. அதே வேளை அவற்றின் நம்பகத்தன்மை மிகவும் குறைவானவை.
நாட்டில் இதுவரை பெரும்பாலும் PCR எனப்படும் Polymerase Chain Reaction (மூலக் கூற்று உயிரியலில் பாலிமரேசு தொடர் வினை) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மரபு நூலிழையின் (DNA) குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை பல்லாயிரக்கணக்கில் பெருக்கி, ஒருவருக்குத் தொற்று இருக்கிறதா என்று கண்டறிந்து கொண்டிருக்கிறோம். இதற்கு, மூக்கு மற்றும் தொண்டையில் துடைத்து எடுக்கப்படுவதை பரிசோதித்து முடிவு சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு நாள் (சில சமயங்களில் இரண்டு நாட்கள் கூட) எடுக்கலாம்.
ஆனால், வைரஸிலிருந்து மரபணுப் பொருளைத் தேடும் PCR சோதனைகள் போலல்லாமல், விரைவான Antigen சோதனைகள் வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதங்களைக் கண்டறிந்து அரை மணி நேரத்திற்குள் தொற்று இருக்கிறதா இல்லையா என்ற முடிவைக் கூற முடியும்.
முந்தைய ஏழு நாட்களில் தொற்றின் அறிகுறிகளைக் கொண்டிருந்த அனைவரையும் Antigen சோதனைகள் விரைவாகவும் சரியாகவும் கண்டுபிடித்திருந்தாலும், வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது வீரியமாகப் பரவாதவர்களை Antigen சோதனைகள் கண்டுபிடிக்கவில்லை என்று Doherty Institute செய்த ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
விரைவாக முடிவை சொல்லக் கூடிய Antigen சோதனைகளின் உணர் திறன் (sensitivity) PCR சோதனைகளை விடக் குறைவான இருப்பதால், சில சமயங்களில், தொற்று இல்லாதவரையும், தொற்று உள்ளவர் என அடையாளம் காட்டக் கூடும். அதனால், Antigen சோதனை மீதான நம்பகத்தன்மை குறைவதற்கு வழிவகுக்கக்கூடும்.
வெறும் 15 நிமிடங்களில் முடிவு சொல்லக் கூடிய Antigen சோதனைகளை வீட்டிலேயே ஒருவர் செய்யலாம் என்று கூறும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr Peter Collignon, ஒருவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை வீட்டிலேயே சோதித்துப் பார்ப்பதற்கு ஒத்தது என்கிறார்.

A health professional poses with a test cassette used for a COVID-19 rapid antigen test at a testing centre in Berlin on 17 February, 2021. Source: AFP
அப்படியென்றால்.... தயக்கம் ஏனோ?
தொற்றின் அறிகுறிகளை வெளியில் காட்டுபவர்களிடையே, Antigen சோதனைகள் 95 சதவீதம் துல்லியமாக முடிவுகளை சொல்கிறது என்றும், அறிகுறிகளை வெளியில் காட்டாதவர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே சரியாகக் காட்டுகிறது என்றும் Oxford பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
இது போதாது என்று ஆஸ்திரேலிய நோயியலாளர்கள் நம்புகிறார்கள்.
நாங்கள் இதனை எவ்வாறு பயன்படுத்தலாம்?
PCR சோதனைக்கு மாற்றாக Antigen சோதனையைப் பயன்படுத்தாமல், PCR சோதனை முடிவுகளுக்குக் காத்திருக்கும் வேளையில் Antigen சோதனையைப் பயன்படுத்தி, தொற்றாளர்கள்களை விரைவில் கண்டுபிடிக்கலாம் என்று Dr Peter Collignon நம்புகிறார்.

A package of seven NHS Test and Trace COVID-19 rapid antigen self-testing kits which were received in the mail after being ordered online in the UK. Source: Press Association
அரசு என்ன சொல்கிறது?
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பணியாற்றுபவர்களுக்குத் தொற்று இருக்கிறதா என்பதை விரைவில் கண்டுபிடிக்க Antigen சோதனையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு இரண்டு பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
இந்த சோதனையின் பயன்பாட்டிற்கு, மருந்துகளைக் கட்டுப்படுத்தும் Therapeutic Goods Administration (TGA) ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் சில தலைவர்கள் தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
PCR சோதனைக்கு மாற்றாக Antigen சோதனையைப் பயன்படுத்த முடியாது என்று கூறிய நிதியமைச்சர் Simon Birmingham, அதன் பயன்பாட்டை நிராகரிக்க வில்லை.
“இந்த வகையான சோதனைகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் தொடர்ந்து கவனமாக ஆராய்வோம்,” என்று அவர் கூறினார்.
New South Wales பாடசாலைகளிலும் வேறு சில பணியிடங்களிலும் இதனைப் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர், சுமார் 18 வெவ்வேறு Antigen சோதனைகளுக்கு TGA அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று கூறினார்.
- With AAP
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.