கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கூப்பன் வழங்கும் செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டம் விரைவில் ஆரம்பமாவதாக Premier Steven Marshall அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படும் tours & experiences போன்றவற்றில் பங்குபற்றுவதற்கான $50, $100 மற்றும் $200 கூப்பன்கள் ஈஸ்டர் மற்றும் ஏப்ரல் பள்ளி விடுமுறையின் பின்னர் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ளன.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தவர்களுக்கான இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இதன் மூன்றாவது கட்டம் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும் எனவும் இதுகுறித்த மேலதிக விபரங்களை https://southaustralia.com/voucher என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
