SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்களுக்கு Thunderstorm ஆஸ்துமா எச்சரிக்கை!

thunderstorm asthma
Source: AAP

2 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவு கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அறிவித்திருந்தன.

வசந்த காலத்தில் பூக்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் காற்றில் பரவும் மகரந்த துணிக்கைகள், சுவாசத்துடன் கலந்துகொள்வதால் ஏற்படுகின்ற ஆஸ்துமா வியாதியால் பாதிக்கப்படுகின்றவர்கள், Thunderstorm ஆஸ்துமா மூலம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

La Nina காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காணப்படுகின்ற பின்னணியில், அதிக மகரந்த எண்ணிக்கை, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியவை Thunderstorm ஆஸ்துமா ஏற்படுவதற்கு வழிவகுக்கும் காரணிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், உள்ளிட்ட தென்கிழக்கு கரையில் அதிகரித்துவரும் சீரற்ற வானிலையும் காற்றும் thunderstorm ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயுள்ளவர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி சுகாதர தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 23 Thunderstorm ஆஸ்துமா தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 10 ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm ஆஸ்துமா தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுமார் 1400 பேர் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும், அவர்களில் மெல்பனில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now