SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர் ஏற்கனவே தொற்றுக்கண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Victoria to end lockdown.
Financial and other support for COVID-19 in Victoria Source: AAP Image/Erik Anderson

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெல்பனில் கோவிட் சோதனைகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை போதாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் 68 பேர் உள்ளனர்.

சுமார் 17 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனிமைப்படுத்தலில் இருந்தமையால் இவரிடமிருந்து சமூகத்தில் வேறு எவருக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்பில்லை என குறிப்பிடப்படுகிறது.

விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் 68 பேர் உள்ளனர்.

இதேவேளை மெல்பனில் முடக்கநிலை நீக்கப்பட்டு கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளநிலையில் இக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாதகநிலை தொடர்வதாக விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.

அதேநேரம் கோவிட் சோதனைகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை போதாது எனவும் பெருமளவிலானோர் சோதனையை மேற்கொள்ளும்பட்சத்திலேயே இக்கோவிட் பரவலை முறியடிக்கலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 3000 பேர் இன்னமும் தனிமைப்படுத்தலில் உள்ள அதேநேரம் தொற்றாளர்கள் சென்றுவந்த 122 இடங்களுக்கான கோவிட் எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

இந்த இடங்கள் குறித்த விவரங்கள் மாநில அரசின் coronavirus.vic.gov.au இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏதேனும் ஒரு தேவைக்காக இந்த இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now