SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் புதிதாக இருவருக்கு கோவிட் தொற்று! Delta வைரஸ் பரவிய விதமும் கண்டுபிடிப்பு!!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் Acting Premier James Merlino அறிவித்தார்.

A person is seen wearing a face mask in Melbourne, Friday, June 4, 2021. Victoria has recorded four new locally acquired cases of coronavirus in the past 24 hours. (AAP Image/James Ross) NO ARCHIVING
A person is seen wearing a face mask in Melbourne Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • மெல்பனில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை வியாழன் நள்ளிரவு முதல் தளர்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் தொடர்கிறது.
  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெல்பனில் புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான முதற்கட்ட தொடர்பு கிடைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருவருக்கு மாத்திரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்கண்டவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றுக்கண்ட Arcare முதியோர் இல்ல பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும், மற்றையவர் மெல்பன் மேற்கு பரவலுடன் தொடர்புடைய மாணவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மெல்பனில் புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான முதற்கட்ட தொடர்பு கிடைத்திருப்பதாகவும், இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் குறித்த பரவல் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் Acting Emergency Services அமைச்சர் Danny Pearson தெரிவித்தார்.

மே 8ம் திகதி இலங்கையிலிருந்து வந்த நபருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதாகவும், இதையடுத்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்நபர் 14 நாட்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு முழுமையாக குணமடைந்த பின்னர் மே 23ம் திகதி வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டதாகவும்  Danny Pearson  தெரிவித்தார்.

குறித்த நபருக்கும் Delta வகை வைரஸ் பரவலுக்கும் பின்வரும் வழிகளில் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என  Danny Pearson  குறிப்பிட்டார்.

  • குறித்த நபருடன் விமானத்தில் வந்த மற்றறொருவர் இவருக்கு தொற்றை பரப்பியிருக்கலாம்,
  • தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறிய பின் இவர் வைரசை பரப்பியிருக்கலாம்,
  • இந்நபரின் போக்குவரத்திற்குப் பொறுப்பாகவிருந்த பணியாளர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம்,
  • இந்நபர் தன்னுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு வைரசை பரப்பியிருக்கலாம்.

இவ்விடயம் குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும் எனவும் Danny Pearson தெரிவித்தார்.

இதேவேளை மெல்பனில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை வியாழன் நள்ளிரவு முதல் தளர்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் தொடர்வதாக Acting Premier James Merlino தெரிவித்தார்.

முடக்கநிலை தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now