கடந்த 7 ஆண்டுகளில் விசா மோசடி குறித்த பல ஆயிரம் முறைப்பாடுகள் உள்துறை அமைச்சிற்கு கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தரவுகள் குறிப்பிடுகின்றன.
எனினும் பல விசா மோசடிகள், முறைப்பாடு செய்யப்படாமல் விடப்படுகின்றன என்று குடிவரவு முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் ஊடாக விண்ணப்பிக்கும்போது இடம்பெற்றிருக்கும் முறைப்பாடுகளும் இதற்குள் அடங்குவதாக உள்துறை அமைச்சின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று போலி குடிவரவு முகவர்கள் அல்லது சட்டத்தரணிகள் என வேடம்போடுபவர்களால் பலர் ஏமாற்றப்படும் சந்தர்ப்பங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மோசடிக்கு புகலிடக்கோரிக்கையாளர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை மோசடி ஊடாக ஒருவரது விசா ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ உள்துறை அமைச்சு அதற்கு பொறுப்பேற்காது என்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கான தீர்வினையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விசா மோசடி தொடர்பில் முறையிடுவதானாது சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களை அடையாளம் காட்டுவதற்கும் மேலும் மோசடிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் உதவும் என்பதால் பாதிக்கப்படுபவர்கள் தவறாது இதனை முறையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் Border Watch Online Report என்ற இணையத்தளமூடாக முறைப்பாடு செய்யலாம்.
இந்தப்பின்னணியில் தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் தொடர்பில் 40 ஆயிரம் டொலர்கள்வரை செலவிட்டும் பயனின்றிப் போய்விட்டதாக தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ரமேஷ் நம்மிடம் தெரிவித்திருந்தார்.
தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை நம்பி ஏமாந்துவிட்டதாக பிரிஸ்பேனைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான சங்கோவும் நம்மிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
