வெளிநாட்டில்வைத்து நமது Passport தொலைந்தால் என்ன செய்வது?

ஒருவருக்கு வெளிநாட்டுப் பயணங்களின் போது passport கடவுச்சீட்டு தொலைந்து போனால் அது பெரும் நெருக்கடியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி தொலைந்துபோனால் சொந்தநாட்டுக்கு வந்து சேர்வது எப்படி என்பதை நாம் கட்டாயம் அறிந்து வைத்திருக்கவேண்டும்.

Changes in 2018

Source: Getty / Getty Images

Passport தொலைந்துபோனால் பதட்டமும் மனஉளைச்சலும் ஏற்படும்போது உடனடியாக என்னசெய்யவேண்டும் என்பதுகூட மறந்து போகக்கூடும். Passport தொலைந்தபின்பு என்னசெய்யவேண்டும் என்பது, பயணம் புறப்படும்முன்பு ஒருவர் என்ன ஆயத்தங்களுடன் புறப்பட்டார் என்பதைப் பொறுத்தது. பொதுவாக passport இன் photo copy ஒன்றையும் driver’s license போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றையும் மற்றொரு அடையாள ஆவணமும் (Medicare போன்றது) வெளிநாட்டுப் பயணி ஒருவர் கட்டாயம் உடன் எடுத்துச்செல்லவேண்டும் என்பதோடு விமான டிக்கட் அல்லது check-in செய்தபின் passport காணாமல் போயிருந்தால் boarding card என்பன உங்கள் வசம் இருக்கவேண்டும்.

அண்மையில் மெல்பர்னில் இருந்து நியூஸீலாந்து சென்ற ஒரு பயணி ஒருவர் அங்கு Auckland விமானநிலையத்திலிருந்து வெளியேறிய பின்பு தான், தனது passport ஐத் தொலைத்துவிட்டதை உணர்ந்தார். ஒருவார விடுமுறைக்காக அங்கு சென்ற அவர் தனது passport இன் photo copy மற்றும் driver’s license ஆகியவற்றைப் பயன்படுத்தி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வரமுடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகிலுள்ள பசிபிக் பிராந்திய நாடுகளைப் பொறுத்தவரை இது சாத்தியமாகலாம். ஆனால் அதற்கு வெளியே உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இப்படியான சாத்தியங்கள் மிகக் குறைவு.

ஒருவர் passport இல்லாமல் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி வருவதற்கு இரண்டு படிநிலைகளை அவர் தாண்டவேண்டும். ஒன்று immigration and emigration என்ற குடிவரவு குடிஅகல்வு அதிகாரிகள் செயல்படும் counter. இங்கு நேரடியாகவோ அல்லது electronic முறையிலேயோ ஒருவரது தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அங்கிருந்து அடுத்த நிலைக்குச்செல்ல அனுமதிவழங்கப்படும். Passport த் தொலைத்த மெல்பர்ன் பயணியைப் பொறுத்த அளவில் நியூஸீலாந்து குடிவரவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய passport office உடன் தொடர்புகொண்டு அவரது அடையாளத்தை உறுதி செய்ததாகச் சொல்லப்படுகிறது.
Traveller
Traveller Source: AAP
இரண்டாவது படிநிலை விமானத்தில் ஏறும் இடத்தில் இருக்கும் check point ஆகும். இங்கு passport மற்றும் boarding card என்பன சரிபார்க்கப்படும். Passport இல்லாத ஒருவர் விமானத்தில் ஏறி ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால் அந்த நாடு அவரை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவரை மீண்டும் புறப்பட்ட இடத்தில் கொண்டுவந்துவிடும் பணி அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தைச் சார்ந்ததாகும். ஆகவே passport இல்லாத பயணியை விமான நிறுவனம் ஏற்றிச் செல்லாது.

ஒருவர் Passportஐ தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற விபரம் Department of foreign affairs and trade வெளியிட்டுள்ள கைநூலில் இருக்கிறது. இரண்டுவிதமான சந்தர்ப்பங்களின்போது passport தொலைந்து போகலாம். ஒன்று ஆஸ்திரேலியா என்று சொந்த நாட்டில் இருக்கும்போது; மற்றையது வெளிநாட்டில் நாம் பயணம் செய்துகொண்டிருக்கும்போது. சொந்த நாட்டில் தொலைந்துபோனால் இதுபற்றி உறுதிசெய்துகொண்டு முதலில் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலிய passport office இற்கு 131232 என்ற எண்ணுக்கு அழைத்து தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட தகவலை அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். அல்லது இணையதளமூலமாக அறிவிக்கவேண்டும். இது சட்டப்படி கட்டாயமானது. தெரிவிக்காவிட்டலோ அல்லது பொய்யான அல்லது misleading ஆன தகவலைத் தந்தாலோ ஒருவருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட தகவலை தெரிவித்தபின்பு Australia Passport office உடனடியாக உங்கள் passport ஐ cancel செய்துவிடும். இதை வேறொருவர் பயன்படுத்தமுடியாது என்பது மட்டுமல்ல, ஒருவேளை தொலைந்த passport திரும்பக்கிடைத்தாலும் நீங்களும் கூட பயன்படுத்த முடியாது.
The Australian Passport Office in Canberra
The Australian Passport Office in Canberra (SBS) Source: SBS
அதன்பின்பு புதிய passport ஒன்றுக்கு ஒருவர் முறையாக விண்ணப்பம் செய்யவேண்டும். தொலைந்த passport ஐ ஒருவர் renew புதுப்பிக்க முடியாது. பழைய passport தொலைந்தது பற்றி காவல்துறையிடம் முறைப்பாடு செய்த ஆதாரத்தை அல்லது முறைப்பாட்டின் பிரதியை புதிய passport பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்கலாம். உள்நாட்டில் புதிய passport ஒன்றைப் பெறுவதற்கு சுமார் 6 வார காலம் எடுக்கலாம். அவசரமாகப் பயணம் செய்யவேண்டிய தேவையிருப்பின் காரணத்தை சமர்ப்பித்து விரைவில் பெற்றுக்கொள்ள வழமையான படிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

ஐந்து வருடங்களுக்குள் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவரது passport தொலைந்ததாக முறைப்பாடு செய்தால் வழங்கப்படும் புதிய passport 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றபோதும் 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் passport கட்டணம் செலுத்தப்படவேண்டும். ஐந்து வருடங்களுக்குள் மூன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொலைந்திருந்தால் அடுத்த passport 2 வருடம் மட்டும் செல்லுபடியானதாக வழங்கப்படலாம். அல்லது அவருக்கு புதிய passport மறுக்கப்படலாம்.

முக்கியமாக நாம் அறிந்துவைத்திருக்கவேண்டியது வெளிநாட்டில் passport தொலைந்துபோனால் என்ன செய்வது என்பதே. முதலாவதாக அருகாமையிலுள்ள காவல் நிலையத்தில் (24மணிக்குள்) முறைப்பாடு செய்து அந்த முறைப்பாட்டின் பிரதியை கைவசம் வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு நீங்கள் இருக்கும் நகரத்தில் அல்லது அருகிலுள்ள நகரத்தில் இருக்கக் கூடிய ஆஸ்திரேலிய தூதரகம் அல்லது consulate office எனப்படும் துணை தூதரகத்திற்குச் சென்று emergency passport தேவை என்று ஒருவர் விண்ணப்பம் செய்யவேண்டும். இதை இணையதளம் மூலமாகவும் செய்யமுடியும் என்றபோதும் புதிய emergency passport ஐப் பெற ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு நேரிலேயே செல்லவேண்டும். உங்களிடம் தொலைந்த passport இன் photocopy, Australian driver’s licenses மற்றும் மேலதிக ஆவணம் ஏதுமிருப்பின் உங்கள் அடையாளத்தைச் சமர்ப்பித்து emergency passport ஒன்றைப்பெறுவது இலகுவாக இருக்கும்.
An Australian passport pictured in Brisbane, Thursday, July 25, 2013. (AAP Image/Dan Peled)
An Australian passport pictured in Brisbane, Thursday, July 25, 2013. (AAP Image/Dan Peled) NO ARCHIVING Source: AAP
ஆஸ்திரேலிய தூதரகம் இல்லாத நாடொன்றில் நமது ஆஸ்திரேலிய passport தொலைந்துபோனால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் விமானமொன்றில் ஏறி ஒருவர் நாட்டுக்குத் திரும்பமுடியும் . ஆனால் அந்த விமான நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுடன் தொடர்புகொண்டு இதற்கான அனுமதியைப் பெறவேண்டும்.

Emergency passport ஐப் பொறுத்த அளவில் அதை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே நீங்கள் மேற்கொண்டு எங்கு செல்லவிரும்புகிறீர்களோ அதுபற்றி ஆலோசனை செய்து பயணத்தைத். தொடரவேண்டும் அல்லது ஆஸ்திரேலியா திரும்பவேண்டும். வேறு வழியில்லை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By R.Sathiyanathan
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand