சிலருக்கு கொரோனா தடுப்பூசி 3வது தடவையும் தேவைப்படலாம்

நாட்டில் Covid-19 தடுப்பூசி வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு மூன்றாவது சுற்று – Booster Shot தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு சுற்றில் போட்ட தடுப்பூசிதான் மீண்டும் வழங்கப்பட வேண்டுமா? யாருக்கு இந்த மூன்றாவது சுற்று தேவை? இவை போன்ற சில கேள்விகளுக்குப் பதில் தேடும் கட்டுரை இது.

A teenager receives a COVID-19 vaccination at the Royal Exhibition Building in Melbourne, Thursday, September 2, 2021

A teenager receives a COVID-19 vaccination at the Royal Exhibition Building in Melbourne, Thursday, September 2, 2021 Source: AAP

நாட்டில், குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மா நிலங்களில் Covid-19 தடுப்பூசி வேகமாக வழங்கப்பட்டு வருகிறது.

பதினாறு வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு சுற்று தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.  தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தொற்றின் தாக்கம் குறையும் என்பது மட்டுமல்ல, பெரும்பான்மையானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தேவையில்லாமல் போகும் வாய்ப்புள்ளது.

தற்போது பயன்பாட்டிலுள்ள COVID-19 தடுப்பூசிகள் (Pfizer, Moderna மற்றும் Astra Zeneca) மூன்றுமே தொற்று ஏற்பட்டாலும் கடுமையான நோய் வராமல் தடுக்கின்றன.  தடுப்பூசி போட்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை, மற்றும் இறப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுப்பூசிகள் குறைக்கின்றன.

ஆனால், இரண்டு சுற்று தடுப்பூசிகள் போட்டு முடித்தவர்கள், மூன்றாவது முறையாக Booster எனப்படும் தடுப்பூசியின் அடுத்த சுற்றைப் போடத் தொடங்க வேண்டியிருக்கலாம்.

Booster தடுப்பூசி ஒருவருக்கு எப்போது தேவைப்படும்?

ஆரம்பத்தில் வழங்கப்படும் இரண்டு சுற்று தடுப்பூசிகள் மற்றும் அதன் பின்னர் வழங்கப்படும் ஊக்க (booster) சுற்று தடுப்பூசிகளை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.  இவை இரண்டுமே வெவ்வேறு விடயங்கள்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிலருக்கு, முதல் இரண்டு சுற்று COVID-19 தடுப்பூசியின் ஒரு பகுதியாக மூன்றாவது சுற்று தேவைப்படலாம்.  இவர்களுக்கு, இரண்டாவது சுற்று வழங்கப்பட்டு சிறிது காலத்திற்குப் பின்னர், தடுப்பூசியின் வீரியத்தை மேம்படுத்த வழங்கப்படலாம்.

இப்படியான தடுப்பூசிகள் தசைகளைக் கடினமாக இறுகச் செய்யும் நோய்க்கு எதிராக வழங்கப்படும் tetanus மற்றும் whooping cough எனப்படும் கக்குவான் இருமல் வராமல் வழங்கப்படும் ஊக்க சுற்று தடுப்பூசிகள் போன்றவை.

இது யாருக்குத் தேவைப்படலாம் என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே சொடுக்கவும்.

எஞ்சியவர்களுக்கு, எப்போது ஊக்க சுற்று தடுப்பூசி தேவைப்படும் என்று சரியாகத் தெரியவில்லை.  ஆறு மாதங்கள் என்று சிலரும், எட்டு மாதங்கள் என்று வேறு சிலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.  இது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், இந்தக் கேள்விக்கான சரியான, உறுதியான பதில் யாரிடமும் இல்லை.

கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பிறபொருளெதிரிகளை (antibodies) உடலில் உருவாக்க, ஊக்க சுற்று தடுப்பூசி சிறப்பாக செயல் படுகிறது என்று ஃபைசர் நடத்திய அண்மைய ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்தது.  இந்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதே வேளை, ஃபைசர் தடுப்பூசியின் ஊக்க சுற்று பயன்பாட்டிற்கான ஒரு விண்ணப்பத்தை ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் மதிப்பீடு செய்ய ஆரம்பித்திருப்பதாக அறிய வருகிறது.

TGA to consider Covid vaccines for children aged between 5 and 11
Appointments for Pfizer jabs will open for children aged 12+ from 13 September. Source: Getty Images/FatCamera

தடுப்பூசி போட்டதன் பின்னர், உடலில் உருவாகும் பிறபொருளெதிரிகள் நாளடைவில் குறையும் என்றும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு குறைவதற்கான சாத்தியம் இருப்பதையும் நாங்கள் அறிவோம்.  இதனை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த University of California San Diego ஆராய்ச்சியாளர்கள், முடிவுகளை The New England Journal of Medicine என்ற பிரபல மருத்துவ சஞ்சிகையில் இந்த மாத ஆரம்பத்தில் பிரசுரித்துள்ளார்கள்.

நம் நாட்டில் சிலருக்கு இந்த ஊக்க சுற்று தடுப்பூசி அவசியம் தேவைப்படலாம்.  உதாரணமாக, முதியோர், Covid-19 தொற்றாளர்களைப் பராமரிக்கும் வைத்தியர்கள், செவிலியர்கள் போன்றவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊக்க சுற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு ஊக்க சுற்று தடுப்பூசிகளைப் பரவலாக வழங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளைப் போட்ட இஸ்ரேலியர்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஊக்க சுற்று தடுப்பூசியைப் பெற தகுதி பெறுகிறார்கள்.

ஆனால் ஐரோப்பியர்களுக்கு ஊக்க சுற்று தடுப்பூசி அவசரமாக வழங்கப்படத் தேவையில்லை என்று ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

ஒரே வகை தடுப்பூசிதான் போட வேண்டுமா?

முதல் இரண்டு சுற்று தடுப்பூசி போட்ட அதே வகை தடுப்பூசி தான் ஊக்க சுற்று தடுப்பூசியாகப் போடப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு உறுதியான பதில் இன்னமும் தெரியவில்லை.

ஊக்க சுற்று தடுப்பூசியாக, வேறொரு தடுப்பூசியைப் பெறுவதில் நன்மைகள் இருக்கலாம். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட COV-BOOST என்ற குழு இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இப்போதைக்கு, மக்கள் இரண்டு சுற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கே, அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது.

SBS News in Macedonian 18 March 2021,
A healthcare worker prepares a syringe with the Astra Zeneca Covid19 dose. Source: AAP

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By Nicholas Wood, Kulasegaram Sanchayan

Source: The Conversation




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now