SKIP TO MAIN CONTENT

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

செப்டம்பர் 22 பொதுவிடுமுறையையொட்டி, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.

Traffic police officer
One man, traffic warden standing on the street, speed test with police radar. Source: Getty / South_agency/Getty Images

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஆஸ்திரேலியா முழுவதும் செப்டம்பர் 22ஆம் தேதி தேசிய பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் பலர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் செப்டம்பர் 21 புதன்கிழமை நள்ளிரவு 12.00 முதல் செப்டம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 வரை சாலை விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.

அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை செப்டம்பர் 26ம் திகதி நீண்ட வார விடுமுறையென்பதால், செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 முதல் செப்டம்பர் 26 திங்கட்கிழமை இரவு 11.59 வரை double-demerit points தண்டனை நடைமுறையில் இருக்கும்.

வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

பொது விடுமுறை நாளான செப்டம்பர் 22ம் திகதியன்று ACT பிராந்தியத்தில் double-demerit points தண்டனை நடைமுறையில் இருக்காது.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் Northern Territory-இல் double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் சாலை விதிமீறல்களில் ஈடுபடுவர்களுக்கே double-demerit points தண்டனை விதிக்கப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now