KEY POINTS
- working holiday மற்றும் சர்வதேச மாணவர் விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
- Passenger Movement Charge அதிகரிப்பது என்பது ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும்போது அதிக செலவாகும் என்பதாகும்.
- விசா பரிசீலனை காலப்பகுதியை விரைவுபடுத்த முடியுமென அரசு நம்புகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள், backpackers மற்றும் சர்வதேச மாணவர்கள் இனி அதிக விசா விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 1 முதல் visitor விசா மற்றும் தற்காலிக விசா துணைப்பிரிவுகள் உட்பட பல்வேறு விசா வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அரசு உயர்த்தும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 1, 2023 முதல் விசா விண்ணப்பக் கட்டணங்களை அரசு 6 சதவீதத்தால் அதிகரிக்கிறது.
Visitor 600 விசா விண்ணப்பக் கட்டணம் $40 அதிகரித்து, $150 இலிருந்து $190 ஆக அதிகரிக்கிறது.
Student 500 விசா விண்ணப்பக் கட்டணம் $65 ஆல் அதிகரித்து $650இலிருந்து $715 ஆக அதிகரிக்கிறது.
Working holiday விசா விண்ணப்பக் கட்டணம் $130 ஆல் அதிகரித்து $510இலிருந்து $640 ஆக உயர்த்தப்படும்.
Pacific Engagement விசா மற்றும் Pacific Australia Labour Mobility scheme விசாக்களுக்கு மட்டுமே அதிகரிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதிகரிக்கப்படும் விசா கட்டணங்கள் மூலம் 2023-24ல் 100 மில்லியன் டொலர்களையும், ஐந்து ஆண்டுகளில் 665 மில்லியன் டொலர்களையும் அரசு பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Passenger Movement Chargeஉம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதன்படி சர்வதேச விமானங்கள் அல்லது கடல்வழிப் போக்குவரத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியே செல்லும் பயணிகள் ஜூலை 1, 2024 முதல் கூடுதலாக $10 செலுத்தவேண்டும். அதாவது தற்போது $60ஆக காணப்படும் இக்கட்டணம் இனிமேல் $70 ஆக அதிகரிக்கப்படுகிறது.
இதேவேளை விசா பரிசீலனை காலத்தை விரைவுபடுத்துவதற்கும், தற்போதுள்ள விசா செயலாக்க முறைகளை மேம்படுத்துவதற்கும், 2023-24 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $75.8 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
