முக்கிய புள்ளிகள்
- தனியார் சொத்து அல்லாத சில பகுதிகளைப் பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களிடம், கலாச்சார சமூக மற்றும் பொருளாதார நன்மைகளுக்காக, Land rights (நில உரிமைகள்) திருப்பிக் கையளிக்கிறது.
- நில உரிமைகள், பூர்வீக உரிமை மற்றும் ஒப்பந்தம் ஆகியவை வெவ்வேறு சட்ட மற்றும் அரசியல் செயல்முறைகள், ஆனால் அவை அனைத்தும், பூர்வீகக் குடிமக்களுக்கு, அவர்களது நாட்டுடனான தொடர்பை அங்கீகரித்து சுயநிர்ணயத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- இந்த இயக்கம் 1966ஆம் ஆண்டு, Wave Hillஇல் நடந்த போராட்டத்துடன் தொடங்கியது. பூர்வீகக்குடி மக்களின் நில உரிமைகள் (வட பிராந்திய) சட்டம் போன்ற மைல்கல் சட்டங்களுக்கு வழிவகுத்தது மட்டுமன்றி, இன்றும் தொடர்கிறது.
- ஆஸ்திரேலியாவில் பூர்வீகக்குடியின மக்களின் நில உரிமைகள் யாவை?
- பூர்வீகக் குடியின மக்களின் நில உரிமை இயக்கம் எவ்வாறு ஆரம்பித்தது?
- பூர்வீகக்குடியின நில உரிமைகள் எவற்றை உள்ளடக்கின?
- பூர்வீகக்குடியின மக்களின் நில உரிமைகள், பூர்வீக உரிமை மற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன?
- பூர்வீகக்குடியின நில உரிமைகள் இன்று ஏன் முக்கியம்?
- ஒரு உள்ளூர் உதாரணம்: Darkinjung பூர்வீகக்குடியின மக்களின் நில சபை
- பூர்வீகக் குடியின மக்களின் நில உரிமை குறித்த சவால்கள் யாவை?
- அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் பூர்வீக நில உரிமை ஏன் முக்கியம்?
ஆஸ்திரேலியாவில் பூர்வீகக்குடியின மக்களின் நில உரிமைகள் யாவை?
பல ஆண்டுகளாக, பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களுக்கும் அவர்களின் நிலத்துக்கும் உள்ள தொடர்பு அங்கீகரிக்கப்படவில்லை. நில உரிமைச் சட்டங்கள் அவர்களின் பாரம்பரிய நிலங்களின் மீது சட்டபூர்வ கட்டுப்பாட்டை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டன.
காலனித்துவ காலத்திற்கு முன்னர், பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமது நிலத்தைப் பராமரித்து வந்தார்கள்.
ஆனால் காலனித்துவம் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்த நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல என்று பொருள்படும் ‘Terra nullius’ என்ற தவறான கருத்தின் அடிப்படையில் அந்த நிலத்தை அபகரித்துக்கொண்டது.

பூர்வீகக்குடியின மக்களின் நில உரிமை இயக்கம் எவ்வாறு ஆரம்பித்தது?
நில உரிமை இயக்கம், 1966ஆம் ஆண்டில் Wave Hill என்ற இடத்தில் நடந்த போராட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தது. பின்னர், 1967ஆம் ஆண்டில் ஒரு தேசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பூர்வீகக் குடி மக்களுக்கான சட்டங்களை உருவாக்க அரசு அனுமதித்தது. 1976 ஆம் ஆண்டில், பூர்வீகக்குடி நில உரிமைகள் (வட பிராந்திய) சட்டம் நிறைவேற்றப்பட்டது, இது பாரம்பரிய நில உரிமை கோரல்களை அங்கீகரித்த முதல் சட்டமாகும்.
சில மாநிலங்களுக்கு அவற்றின் சொந்த நில உரிமைச் சட்டங்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இன்னும் நாடளாவிய தேசிய சட்டம் இல்லை.
பூர்வீகக்குடியின நில உரிமைகள் எவற்றை உள்ளடக்கின?
நில உரிமைச் சட்டங்கள் பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுக்கு திருப்பிக் கையளிக்கப்பட்ட நிலத்தை நிர்வகிக்கவும் நில சபைகளை நிறுவ வழிவகுத்தது.
நில உரிமைகள் அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு மட்டுமே பொருந்தும், தனியார் சொத்திற்கு அது பொருந்தாது - அதை விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாது. இது அறங்காப்பு (trust) ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது என்பதனால் பூர்வீகக்குடி மக்கள் தங்கள் நாட்டைப் பராமரித்து அதைப் பற்றிய முடிவுகளை எடுக்க முடியும்.
READ MORE

Explainer: The '67 Referendum
பூர்வீகக்குடியின மக்களின் நில உரிமைகள், பூர்வீக உரிமை மற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுஎன்ன?
பெரும்பாலும் ஒன்றாக விவாதிக்கப்பட்டாலும், இந்த சொற்கள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன:
- Land rights: நில உரிமைகள் என்பது பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களுக்கு சில நிலங்களைத் திருப்பிக் கையளிக்க அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆகும். இந்த நிலங்கள் பொதுவாக, அந்தந்த சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன மற்றும் ஆதரிக்கும் நில சபைகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
- Native title: பூர்வீக உரிமை - சில பூர்வீகக் குடி மக்கள் தங்கள் பாரம்பரிய சட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பராமரிக்கப்படும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், தங்கள் நிலம் மற்றும் நீர்நிலைகளுக்கு இன்னும் உரிமைகள் உள்ளன என்பதற்கான சட்ட அங்கீகாரம் இது.
- Treaty: ஒப்பந்தம் - ஒரு ஒப்பந்தம் என்பது அரசிற்கும் பூர்வீகக் குடி மக்களுக்கும் இடையிலான முறையான ஒப்பந்தமாகும். நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் இது ஏற்கனவே உள்ள ஒன்று. இங்கே Australiaவில் நாங்கள் இன்னும் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி வேலை செய்கிறோம். இதுவரை எந்த தேசிய ஒப்பந்தமும் இல்லை.
நீதி, அங்கீகாரம் மற்றும் உண்மையான மாற்றத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த அணுகுமுறைகள் ஒன்றாக முன்னெடுக்கப்படுகின்றன.

பூர்வீகக்குடியின நில உரிமைகள் இன்று ஏன் முக்கியம்?
நிலத்தைத் திருப்பிக் கையளிப்பது பூர்வீக குடி சமூகங்கள் தங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் நாட்டோடு மீண்டும் இணைவதற்கு உதவுகிறது. இது வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தையும் ஆதரிக்கிறது.
Wiradjuri Nyemba பின்னணி கொண்ட பெண்ணும் நீர் உரிமை நிபுணருமான Dr Virginia Marshall, பூர்வீகக் குடிமக்கள் நிலம் மற்றும் நீருடன் கொண்டுள்ள தொடர்புகளின் ஆழமான முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
"நீர் நம்மிடம் பேசுகிறது அல்லது மரங்கள் நம்மிடம் பேசுகின்றன. ஆனால் நமது புரிதல் மற்றும் நமது சட்டம் மற்றும் நமது படைப்புக் கதைகளைப் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் அமைந்தவை அவை. மேற்கத்திய, சுற்றுச்சூழல் சித்தாந்தத்தை நாம் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை."
பூர்வீக மக்களுக்கு நில உரிமைகளை வழங்குவது என்பது மக்களின் வீடுகளையோ அல்லது 'கொல்லைப்புறங்களை' பறிப்பதாகவோ அர்த்தமல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம். காணி உரிமைகள் அரச காணியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொருந்தும், அரசிற்குச் சொந்தமான நிலம், தனியார் சொத்து அல்ல. அங்கீகரிக்கப்பட்ட பிணைப்பு உள்ள பூர்வீகக் குடி சமூகங்களுக்கு நிலத்தைத் திருப்பிக் கையளிப்பது பற்றியது. பெரும்பாலும், இந்த நிலங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறு இருக்கும் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக இருக்கும்.
ஒரு உள்ளூர் உதாரணம்: Darkinjung பூர்வீகக்குடியின மக்களின் நில சபை
ஒருவர் வாழ்வில் நில உரிமை ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. Darkinjung உள்ளூர் பூர்வீகக்குடி நில சபை, நியூ சவுத் வேல்ஸ் மாநில பூர்வீகக் குடி நில உரிமைகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. நில உரிமைகள் எதை அடைய முடியும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு அது.
Gomeroi பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர் Uncle Barry Duncan. Darkinjung உள்ளூர் பூர்வீகக்குடி நில சபை நிறுவனர்களில் ஒருவர். 1983ஆம் ஆண்டு அவரது பெற்றோரின் கொல்லைப் புறத்தில் அது நிறுவப்பட்டது.
"அது, இந்த சமூகத்தை ஒன்றிணைத்தது. இது நிலத்தை மீண்டும் பூர்வீகக்குடி மக்களின் உடைமையாக்குவதற்கான ஒரு வழியாக அமைந்தது."
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Central Coast பகுதியிலுள்ள தனது சமூகத்திற்கு நில உரிமைகள் எவ்வாறு பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் சுயநிர்ணயத்தை சாத்தியமாக்கியுள்ளன என்பதை Uncle Barry Duncan தனது வாழ்நாளில் கண்டுள்ளார்.
"நில உரிமைகள் எமக்கு வழங்கப்பட்ட போது, அவர்களின் கொல்லைப்புறங்களை நாங்கள் எவ்வாறு கைப்பற்றப் போகிறோம் என்று பூர்வீகக்குடி பின்னணி கொண்டிராதவர்களிடையே என்பது பற்றி நிறைய பேச்சுக்கள் இருந்தன, மேலும் எங்களைப் பற்றி கூறப்பட்ட விடயங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பதாக இருந்தன. ஆனால், இப்போது இந்த தலைமுறையில், நில உடைமைகளைப் பொறுத்தவரை நாங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக நிலத்தைப் பராமரித்தோம் என்பதை மக்கள் அறிவார்கள் என்று நான் நினைக்கிறேன்."

பூர்வீகக் குடியின மக்களின் நில உரிமை குறித்த சவால்கள் யாவை?
பூர்வீக மக்களுக்கு நில உரிமைகளை வழங்குவது என்பது மக்களின் வீடுகளையோ அல்லது 'கொல்லைப்புறங்களை' பறிப்பதாகவோ அர்த்தமல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம். காணி உரிமைகள் அரச காணியின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொருந்தும், அரசிற்குச் சொந்தமான நிலம், தனியார் சொத்து அல்ல. அங்கீகரிக்கப்பட்ட பிணைப்பு உள்ள பூர்வீகக் குடி சமூகங்களுக்கு நிலத்தைத் திருப்பிக் கையளிப்பது பற்றியது. பெரும்பாலும், இந்த நிலங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறு இருக்கும் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக இருக்கும்.
இந்த விடயத்தில் சில முன்னேற்றம் இருந்தபோதிலும், இன்றும் சில சவால்கள் உள்ளன. செயல்முறை மெதுவாகவும் சிக்கலானதாகவும் இருக்கலாம், மேலும் வரையறுக்கப்பட்ட நிலம் மட்டுமே அப்படிக் கிடைக்கிறது. நீதி, நல்லிணக்கம் மற்றும் பூர்வீகக் குடி மக்களின் இறையாண்மையை அங்கீகரிப்பதற்கான பரந்த முயற்சிகளுடன் நில உரிமைகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் பூர்வீக நில உரிமை ஏன் முக்கியம்?
ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்தவர்கள் நில உரிமைகளைப் புரிந்து கொள்வது, நாட்டின் ஆழமான கதையுடன் இணைவதற்கான ஒரு சக்திவாய்ந்த படியாகும். இது நிலத்தை இழப்பது பற்றியது அல்ல - ஆனால் பூர்வீகக் குடி மக்களுக்கும் நிலத்திற்கும் இடையில் 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஒரு தொடர்பை அங்கீகரித்து மீட்டெடுப்பது பற்றியது.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Understand Aboriginal land rights in Australia
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand
















