இந்தியாவில் தோன்றிய முதல் மனித நாகரிகம் ஆதிச்சநல்லூர்!

Adichanallur Archeological site and Muthalankurichi Kamarasu Source: Supplied
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றபோதிலும் இதுவரை அறிக்கை வெளியாகவில்லை, எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார். இது குறித்து, முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். இந்த உரையாடல் இரண்டு பாகங்களாக இணையத்தில் பதிவாகியுள்ளது. அவரது நேர்காணலின் இரண்டாம் பாகத்தில் - அவர் தொடுத்த வழக்கு குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார்.
Share




